பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விரட்டி விரட்டி அடித்தான். இப்போரில் இராமன் தலையிட்டதனால் போர் என்று கூற இயலாது. இராமனுடைய அம்புக்கு வாலி இரையாகிறான்.

“ஆழிசூழ் உலகம் எல்லாம்
பரதனே ஆள, நீ போய்த்
தாழ்இரும் சடைகள் தாங்கித்
தாங்கரும் தவம் மேற் கொண்டு
பூழிவெங் கானம் நண்ணிப்
புண்ணியத் துறைகள் ஆடி
ஏழிரண்டு ஆண்டின் வா என்(று)
இயம்பினன் அரசன்” என்றாள்.

(கம்பன்-1601)

என்ற கைகேயியின் ஒரு சொல்லுக்குக் கட்டுப்பட்டு மகிழ்ச்சியுடன், தாயே! தந்தை சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ‘உன்னுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்; மறுக்க மாட்டேன்’ என்றதோடன்றி,

“பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்ற தன்றோ!
என் இனி உறுதி அப்பால்”

(கம்பன்-1604)

என்று கூறி கைகேயியிடம் விடை பெற்றுக்கொண்டு நகரினின்று நீங்குகின்றான்; காட்டை நோக்கி நடக்கின்றான். மனித உலகத்தில் இத்தகு பண்பாட்டின் மணிமுடியை வரலாறு கண்டதில்லை. கம்பனின் இராமகாதையைத் தவிர வேறு காப்பியங்களில் இருப்பதாகத் துணிந்து கூற இயலவில்லை. அடுதலும் பொருதலும் அழித்தலும் தான் அரசியல் என்று வரலாறுகள் கூறுகின்றன.

பேரரசு தனக்கு என்ற பொழுதும் இராமன் மகிழ்ந்திலன்; பேரரசு இல்லை - காடுதான் என்ற நிலையிலும் இராமன் கவலைப்படவும் இல்லை. சுக்கிரீவன், வாலியிடம் எல்லாம் உனக்குத்தான் என்று சொல்லிய