பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இந்தியா உலகிற் களிக்கும்-ஆம்! ஆம்!
இந்தியா உலகிற் களிக்கும்-வாழ்க

பாரதி

ஓர் குலம்! ஓர் இனம்!
ஓர் நிறை! ஓர் விலை!

இந்தியா ஒரு பழம் பெரும் நாடு. பரப்பளவில் பெரிய நாடு. இவ்விரண்டின் இயல்புக்கு ஏற்றவாறு வேற்றுமைகளும் பல்கிப் பெருகி வளர்ந்த நாடு. இந்தியா அடிமைப்பட்டதற்கே காரணம் வேற்றுமைகளின் வழி உள்ளிடழிந்ததேயாகும். இந்தியா ஒரு சுதந்திரமான வலிமையான நாடாக இருக்க வேண்டுமானால் இந்திய மக்கள் வேற்றுமைகளை வென்று ஒருமையுணர்வு பெற்றாக வேண்டும். பாரதி, இந்த ஒருமையுணர்வின் அவசியத்தை உணர்கிறான். ஆதலால், இந்திய மக்கள் அனைவரும் ஒரு குலம் என்கிறான்.

குலவேற்றுமைகளை நியாயப்படுத்தி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பாரதி உபதேசிக்க விரும்பவில்லை. காரணம் அவன் ஒரு மதத் தலைவன் அல்லன். அவன் ஒரு சுதந்திர சமுதாயச் சிற்பி. மதத் தலைவர்களாக இருந்தால் வேற்றுமைகளை நியாயப்படுத்துவர். ஒரு மதத்தலைவர் வேற்றுமைகளை நியாயப் படுத்தும் பாங்கினைப் பாருங்கள்; "இந்து சமயத்தில் பன்னெடுங் காலமாகவே வேற்றுமைகள் இருந்து வந்துள்ளன. ஐந்து விரல்களுக்குள் வேற்றுமை இல்லையா?” என்று அவர் கூறுகிறார். என்னே அற்புதம்! இந்து சமூகத்தில் தாழ்த்தப்பட்டோர், பார்ப்பனர் என்ற இரு வகுப்பாருக்கிடையில் வேற்றுமையும் ஐந்து விரல்களுக் கிடையேயுள்ள வேற்றுமையும் ஒன்றா? ஐந்து விரல்கள் உருவத்தில் வேற்றுமையுடையனவே தவிர, உடலிலிருந்து பிரிக்க முடியாத ஒட்டுறவுடையன அல்லவா? அது போலவா, தாழ்த்தப்பட்டோர் பார்ப்பனர் உறவு இருக்கிறது? அவர்களுக்கும் மேட்டுக் குடியினருக்கும் ஒட்டுறவு