பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் சக்தி வழிபாடு

255


நல்லது என்று தெரிந்து தெளிந்த ஒன்றை உறுதியாகக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். இவையெல்லாம் ஆற்றலை வழிபடுவோரின் அடையாளங்கள்; குணங்கள்; ஒழுக்கங்கள் இதனை,

      விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
          வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்;
      நசையறு மனங்கேட்டேன்; - நித்தம்
          நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்;
      தசையினைத் தீசுடினும்-சிவ
          சக்தியைப் பாடுதல் அகங்கேட்டேன்!
      அசைவறு மதிகேட்டேன்; - இவை
          அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

என்று பாரதி பாடுகின்றார்.

இன்றைய தமிழகத்தின் நிலை இரங்கத்தக்கது. இன்றைய தமிழகத்தில் வாழ்வோர் சிலரே பிழைப்பு நடத்துவோர் பலர். இந்தச் சூழ்நிலையில் பாரதியின் அடிச்சுவட்டில் ஆற்றலை - அன்னை பராசக்தியை வழிபட்டுப் பாரதி பெற்ற திறன்களைப் பெற்று மாநிலம் பயனுற வாழ்தல்; இன்று காலம் விதித்துள்ள கட்டளை.