பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

313


தனி உடைமை நாடும் ஆசைக்கு அடிமைப்பட்டுப் போனது. இந்த சூழ்நிலையில்தான் மனிதன் சாதி, மதம், அதிகாரம் ஆகிய தீயூழ்களில் சிக்கித் தவிக்கத் தொடங்கினான். இந்தச் சூழ்நிலையை மாற்றியமைக்கப் பலர் எண்ணினர். பாரதி நமது தலைமுறையில் நம்முடைய காலத்தில் நெம்புகோலாக அமைந்த கவிஞன். சீரழிந்து போன மானுடத்தின் இயல்பைப் பாரதி.


"மாகாளி பராசக்தி உருசியநாட்
டினிற்கடைக்கண் வைத்தா ளாங்கே
ஆகாவென்று எழுந்தது.பார் யுகப்புரட்சி!
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்
வாகான தோள்புடைத்தார் வானமரர்
பேய்களெலாம் வருந்திக் கண்ணிர்
போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம்:
வையகத்தீர், புதுமை காணிர்!


உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை
பிணிகள்பல வுண்டு; பொய்யைத்
தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்க
ளுன்டு உண்மை சொல்வோர்க் கெல்லாம்
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு.
துரக்குண்டே இறப்பு முண்டு;
முழுதுமொரு பேய்வனமாம் சிவேரியிலோ
ஆவிகெட முடிவ துண்டு”


(பாரதியார் கவிதைகள்-புதிய ருஷ்யா 1 & 3)


என்ற கவிதைகளில் விளக்குகின்றான். உழுது அறுவடை செய்யும் உழவனுக்கு உணவு கிடைக்கவில்லை, வாய் திறந்து கேட்டாலோ சிறைக் கொடுமை-சுரண்டும் கும்பலின் கும்மாளம்! அரசியல் சதுரங்கமாயிற்று! எங்கும் கொடுமை!