பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தனியில்ல முறையில்தான் பெற்றோரிடத்தில் கூட அன்பு பெருகி வளரும்! பிரிவே அன்புக்குச் சாதனம்.

பொருள் தேடல் மாந்தன் சீர்

முந்தையோர் தேடிவைத்த செல்வத்தினை வைத்தே வாழ்தல் நன்றோ? இல்லை! மாந்தன் சீர்பெற வேண்டு மானால் அவரவரும் அவரவர்தம் வாழ்க்கைக்குச் செல்வம் தேடவேண்டும். இதுவே தமிழ் மரபு. இங்குத் தொல்காப்பியத்தின் பொருள்வயிற் பிரிவு நினைவு கூரத்தக்கது.

"பெற்றவர் தேடி வைத்த
பெருஞ்செல்வம் உண்டென் றாலும்
மற்றுந்தான் தேட வேண்டும்
மாந்தன்சீர் அதுவே யன்றோ?

(குடும்ப விளக்கு - பக். 136)

என்னும் வரிகள் இதனை உணர்த்தும்.

மருத்துவத்தில் சிறந்த மங்கை

அடுத்து, வீடே மருத்துவ மனையாத் திகழும் தகுதியும் பெற்றிருப்பதைக் காண்கிறோம். குடும்பத் தலைவி தமிழ் வாத்திச்சியாக விளங்கினாள்: வாணிகச் சிறப்புப் பெற்று விளங்கினாள். அதே குடும்பத் தலைவி மருத்துவத் தாயாகவும் விளங்கும் அருமைப்பாட்டினைப் பாவேந்தர் விளக்கும் மாண்பினை உன்னுக! உன்னுக!

"நாடியில் காய்ச்சல் என்றே
நன்மருந் துள்ளுக. கீந்தாள்"

என்றும்,


"அன்றியும் உன்பெண் டாட்டி
அறிவுக்கோர் திருவி ளக்காம்