பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

359


பாரதிதாசனின் உலகம்

359


கவர்ந்துண்ணும் பூச்சி கட்கும்
கால்வைக்க இடமி ராதே!

(குடும்ப விளக்கு - பக். 14)

என்பது மருமகள் கேள்வி:

இனி மாமியாரின் விடையைப் பார்ப்போம். அந்த விடை உயர்ந்த நகைச்சுவையை வழங்குகின்றது. மாமி,

"இவைகளின் உச்சி மீதில்
குன்றுமேல் குரங்கு போல
என்றனைக் குந்த வைத்தார்
என்தலை நிமிர, வண்டி
மூடிமேல் பொத்த விட்டார்!
உன்மாமன் நடந்து வந்தார்
ஊரெல்லாம் சிரித்த" தென்றாள்!

(குடும்ப விளக்கு பக். 14)

சாமான் மூட்டைகளின் மேல் மாமியை உட்கார வைத்து வண்டியின் கூரை மாமியின் தலையில் முட்டியதால் வண்டியின் கூரையைத் தலையளவுக்குப் பொத்தலிட்டார், மாமனார்! அந்தப் பொத்தலுக்குள் மாமியார் தலை நிமிர்ந்தது. மாமனாருக்கோ வண்டியில் இடமில்லை. அதனால்அவர் நடந்தே வந்தார். ஊரெல்லாம் சிரித்தது என்று பாவேந்தனின் பாத்திரம் கூறுகிறது! ஏன் இன்றும் நமக்குச் சிரிப்பு வருகிறதே.

உவமை நயம்

கவிதை நலன்களுள் சிறந்த உவமை நலம், பாவேந்தன் கவிதைகளில் தொட்ட தொட்ட இடமெல்லாம் இடம் பெற்றிருப்பதை யாவரும் அறிவர். ஆயினும் ஒரு செழிப்பான உவமை. தென்னையைப் பற்றிய உவமை. நாம் அன்றாடம் பார்க்கும் தென்னை மரந்தான்! ஆனால் பாவேந்தன் பார்வை வேறு! தென்னை தலைவிரித்து நிற்கிறது! விரித்த உரோமத் தலையையும் தெங்குக் குலைகளையும் தாங்க-