பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
174
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

வைத்திருப்பவர்கள், குவிந்துள்ள பொருளை என்ன செய்யலாம் என்று தெரியாமல் திண்டாடுகிறார்கள்.

அப்படியிருக்க இறைவன் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இன்று சமயத்தின் பெயரால், ஆண்டவனின் பெயரால் குவிந்திருக்கும் பணத்தைப் பயன்படுத்திப் பணம் இல்லை என்ற நிலை ஏற்பட்டால் இறைவன் கொடுக்கத்தான் செய்வார். இன்றைக்கும் நாம் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி அழுதரற்றி இறைவனைக் கூப்பிட்டால் அவர் ஏன் என்று கேட்கத்தான் செய்வார்! இறங்கி வந்து கருணை புரியத்தான் செய்வார்! தேவை ஏற்படும் போது உதவத்தான் செய்வார்! இந்த உண்மைகளை அப்பரடிகள் பாடல்களிற் காண்கிறோம்.

பெரும் பொருளாதாரப் புரட்சியை விரும்பிய காரல் மார்க்ஸ் போன்றவர்கள்கூடப் “பொருளைச் சேர்த்து வைத்திருப்பவன் கொடுக்கிறானா? இல்லையா? இல்லையென்றால் அடித்துப் பிடுங்கு!” என்றுதான் கூறினார்கள். அவ்வாறு அடித்துப் பிடுங்கினாலும் பிடுங்கின நேரத்தில்தான் வலியும் தொல்லையும் இருக்கும். ஆனால் ‘நீ கொடுத்து வாழாவிட்டால் இறைவன் உனக்கு நரகம் வைத்திருக்கிறார். அந்த நரகத்திற்குப் போய் நீ காலமெல்லாம் அவதிப்படாமல் இருக்க வேண்டுமானால் உன்னிடம் உள்ளதை ஒளிக்காமல் கொடு’ என்றார் அப்பரடிகள். இந்தப் பொருளாதாரச் சம வாய்ப்புச் சமுதாய நோக்கோடு - பொதுமை நோக்கோடு பேசுகின்றார் அப்பரடிகள்.

மாசில் வீணையும்
மாலை மதியமும்
வீசு தென்றலும்
வீங்கிள வேனிலும்