பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/254

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
250
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

வாழ்க்கை. அச்சத்தை உதறிய வாழ்க்கை; தனி உணர்வு செத்த வாழ்க்கை; பொதுவில் பூத்த வாழ்க்கை. இந்த இலக்கணத்தோடு நமது அருளியல் வாழ்க்கை அமையுமானால் மறுப்பார் யார்? கதிரவன் உலாப் போதலை மறுப்பாரும் உண்டோ? வீசு தென்றலை மறுப்பாரும் உண்டோ? இறைவனிருப்பிடத்தை உலகத்திற்கு அப்பரடிகள் அறிமுகப்படுத்துகின்றார். கோட்டையென விளங்கும் கோயிலைக் காட்டியா? அழி பசிக்குப் பயன்படும் அப்பத்தைக் காட்டியா? இல்லை! இல்லை! மாசில் வீணையைக் காட்டுகிறார்! இசைக்குரிய இசைவிக்கும் ஆற்றல் வேறு யாருக்கு உண்டு? கட களிறும் அடங்கவல்ல இசை! மாலையில், செவ்வானத்தில் திங்கள்! வீசுதென்றல்! அடைந்து கிடக்க, வீடு கட்டிய ஒருவன் அதனைக் கடந்து வெளியே வருகிறான்! காவலோடு வெளியே உலாப் போகிறான். ஏன்? வீசு தென்றலை அனுபவிக்க! இன்பத்திற்கு எல்லையேயான இளவெயிலை வஞ்சனையின்றி காழ்ப்புக் கலப்பின்றி - கலகப் புகைச்சலின்றி அனுபவிக்க! ஆகா, என்ன இனிமை! வண்டுகள் பாடுகின்றன! தண்ணிர் தங்கிய பொய்கை! அதன் எல்லையில் இனிய காற்று! தண்ணளி தழுவிய காற்று! இத்தகு இன்ப மயமானதாக இறையின் திருவடிகளைக் காட்டுகின்றார் அப்பர் பெருமான்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் விங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே!

என்பது அப்பர் திருப்பாடல்.

இன்றைய சமுதாயத்தில் அருளியல் வாழ்க்கை இத்தகைய இன்பம் தழுவியதாக இருக்கிறதா? இன்று சமய வடிவம் தெரிகிறது; ஆனால் சமய வாழ்க்கையைக் காணோம். ஆரவாரம் கேட்கிறது; ஆனால் அமைதியைக்