பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/269

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொண்டின் நெறி சிறக்க
265
 

வணங்குகின்ற துறைகள் பலப்பல வாக்கி என்றும், வருவனவற்றால் அப்பரடிகளுக்குச் சமய ஒருமைப் பாட்டில் இருந்த பெருவிருப்பை நாம் புரிந்து கொள்ளலாம். அப்பரடிகள் அகம் நிறைந்த அன்பு கலந்த வழிபாட்டையே வற்புறுத்துகிறார். இறைவனின் திருவருளைப் பெறுதற்கு வாயில், ஆன்மாக்களின் அன்பு, ஆன்மாக்கள், அன்பினைப் பெறுதற்குரிய வாயில், பூசனை என்பது மாதவச் சிவஞான முனிவரின் வாக்கு “மறைமிற் றெம்பிரான் மைந்த கேள், இறைமை நம் அருளினால் எய்தற் பாலதாம் அறைதரும் அருளும் மெய் அன்பின் ஆவது அப்பொரை செழு பத்தியும் பூசைப் பெறாரோ” என்பது காஞ்சிப் புராணப் பாடல். திருவருளைப் பெறுவதற்குப் பூசனை, பூசை நேரிடையாத் துணை செய்யாது.

பூசையால் மனத்துள் கனிவும், கசிவும் தோன்றி அன்பு வெள்ளம் பெருக்கெடுக்க வேண்டும். அந்த அன்பே தூய திருவருளைத் தரும். திருவருளைப் பெறுதற்குரிய வாயில் அன்பு, அந்த அன்பைப் பெறுதற்குரிய வாயில் பூசை. அன்பினைத் தூண்டி வளர்க்கும் சாதனமே பூசை. இது அப்பரடிகள் நின்ற நெறி; நமக்கு நாம் வாழக் காட்டிய நெறி. ஏன்? சைவத் திருமுறைகள் அனைத்தும் அன்பு வழிபாட்டையே வற்புறுத்துகின்றன. இறைவன் உவப்பது நாம் அன்பு மிகுதியால் இடக்கூடிய பூவினாலும், நீரினாலுமேயன்றி நாவிற்குச் சுவைதரும் பொருள்களைப் படைப்பதனாலன்று. இன்று நம்முடைய திருக்கோயில்களில் பூவும், நீரும் கொடுத்து மக்கள் வழிபடும் காட்சி பெருகிக் காணவில்லை. “அன்பே சிவம்” என்பது சிவநெறியின் முடிவு. திருமந்திரம் அருளிச் செய்த திருமூலர் 'அன்பும், சிவமும், இரண்டென்பார் அறிவிலார்’ என்று குறிப்பிடுகிறார். சேக்கிழார் அடிகள் 'அன்பினால் இன்பம் ஆர்வார்' என்றும் 'இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்' என்றும் அருளிச் செய்துள்ளது நினைந்தின்புறத்தக்கது.

ஆதலின் ‘அன்பே இன்பம், இன்பமே என்னுடைய அன்பு என்பார் மாணிக்கவாசகர். இத்தகு அன்பு வழி-