பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொள்ளுதல் வேண்டுமென்ற கருத்தை மாணிக்கவாசகர் வலியுறுத்துகிறார். அந்த அழகிய பாடல் இதோ:

“எறும்பிடை நாங்கூ ழெனப்புல
னாலரிப் புண்டலந்த
வெறுந்தமி யேனை விடுதிகண்
டாய்வெய்ய கூற்றொடுங்க
உறுங்கடிப் போதவை யேயுணர்
வுற்றவர் உம்பரும்பர்;
பெறும்பத மேயடி யார்பெய
ராத பெருமையனே!”


மரப்பொந்தும் மனப்பொந்தும்

சாலை ஓரத்தில் வழிச் செல்வோர் நலனுக்காக நிழல் தரும் மரங்கள் வைத்து வளர்க்கப் பெற்றுள்ளன. அம்மரங்களிற் சிலவற்றில் கவனக் குறைவின் காரணமாகவும், வலிமையான உள்ளீடின்மையின் காரணமாகவும் பொந்துகள் விழுவதுண்டு. வழிப்போக்கர்களில் பொறுப்புணராத மனிதர்கள், தாம் புகைத்ததுபோக எஞ்சிய துண்டுப் பீடியை அந்தப் பொந்தில் போட்டுச் சுற்றிலும் கிடக்கும் சருகுகளையும் அள்ளிப் போடுவார்கள். மற்றவர்கள் கட்புலனுக்கு வராத இடத்தில் துண்டு பீடியில் இருந்த தீ, உள்ளூரப் புகைந்து எரிந்து அம்மரம் அழியக் கூடிய-அல்லது முறிந்து விழக்கூடிய நிலையில்தான் தீ வெளிப்படும். அந்த நிலையில் அந்த மரத்தை என்ன செய்தாலும் காப்பாற்ற முடியாது. இது அன்றாடம் சாதாரணமாக நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சி. இந்த எளிய காட்சி அரிய பொருளை விளக்கும் உவமையாகத் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ளது.

உயிர், இறவாத இன்ப அன்பில் திளைத்து இன்புற வேண்டும்-நலமுற வேண்டும் என்ற திருவருள் நோக்கத்தினாலேயே உயிருக்குப் பொறி புலன்களோடு கூடிய