பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வானானால் அது இரங்கத்தக்கதல்லவா? அவனுடைய உணர்வில் செருப்பின் பயனைவிட செருப்பு அதிகப்படியான இடத்தைப் பெற்றுவிடுகிறது. இத்தகு வாழ்க்கை ஆசைக்கோர் எடுத்துக்காட்டு.

இத்தகைய ஆசையென்ற பொந்தில் துய்த்தல் என்ற நெருப்பை யாராவது இட்டுவிட்டால் அந்தத் தீ உள்ளுக்குள்ளேயே புகைந்து எரிகிறது. புலன்கள், வேட்கை என்ற வெப்பத்தால் புகைந்து எரிந்து வெதும்புகின்றன. இந்த நிலையில் திருவருளே உயிரைக் காப்பாற்ற வேண்டும்; அதுவும் உடனடியாகக் காப்பாற்ற வேண்டும். வருந்தும் போது காப்பாற்றுதலே முடியும். அழிந்து போன பிறகு காப்பாற்றுதல் என்பது இயலாத ஒன்று. ஆதலால், ஆசை என்ற பொந்து ஏற்பட்டு அதில் துய்த்தல் என்ற தீ பற்றி எரிவதன் மூலம் தான் அழிந்துபடாமல் காப்பாற்று என்று விண்ணப்பிக்கின்றார் மாணிக்கவாசகர். இத்தகைய கருத்தை விளக்கும் பாடல் இதோ:

“பொதும்புறு தீப்போற்
புகைதெரி யாப்புலன் தீக்கதுவ
வெதும்புறு வேளை
விடுதிகண் டாய்விரை யார்நாறவத்
ததும்பிமந் தாரத்திற்
றாரம் பயிற்றுமத் தம்முரல்வண்
டதும்புங் கொழுந்தேன்
அவிற்சடை வானத் தடலரைசே”

– திருவாசகம்
நீத்தல் விண்ணப்பம்–36

ஊர் நாய்

மாணிக்கவாசகர் நாடுமுழுவதும் சுற்றிப் பார்த்து நாட்டு மக்களின் நாடி பிடித்து, நன்மை தீமைகளை இனம்