பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11


புலன்களும்–பொறிகளும்


உயிர்களுக்கு உய்தியைத் தருவது வழிபாடு. உயிர்களுக்கு வினைநீக்கமும் - திருவருளின்பமும் வழிபாட்டின் மூலமேயாம். எனவே உயிர்கள் தம்முடைய உய்தியைக் கருதியே வழிபாடு செய்கின்றன. “வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்” என்று திருவாசகம் பேசுகிறது. உயிருக்குப் பயன்கூடுவது அனுபவத்தின் வழியாலேயாம். உயிர், காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிக் கரைந்து வழிபாடு செய்வதின் மூலமே உய்திபெற முடியும். உயிர்கள் உய்திபெற வேண்டிச் செய்யும் வழிபாட்டை “ஒன்றி இருந்து நினைமின்கள். உந்தமக்கு ஊனமில்லை” என்று அப்பரடிகள் அருளிச் செய்துள்ளார். வழிபாட்டில் புலன்களும் - பொறிகளும் ஒருங்கியைந்து ஈடுபடவேண்டும். இக்கருத்தையே “ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்பருகும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணமொரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக” என்று பெரியபுராணப் பாடல் விளக்குகிறது.

புலன்களையும் - பொறிகளையும் ஒருங்குபடுத்தி வழிபாட்டில் ஈடுபடுத்தும் கருத்துடனேயே நம்முடைய சமயத்தின் சடங்குகள் அமைந்துள்ளன. புலனாலே

கு.இ.VIII.19.