பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16
மாணிக்கவாசகர் கண்ட காட்சி


பிறவாமை வேண்டுவது உயர்ந்தோர் மரபு. ஆயினும் நல்லன கருதிப் பிறவியை வேண்டுவோரும் உண்டு. அப்பரடிகள் பிறவியை வேண்டுகின்றார். ஏன்? ஆடல் வல்லான் திருக்கோலத்தைக் கண்டு கண்டு களித்திருக்கப் பிறவியை விரும்பினார். “மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.” என்பது அப்பர் வாக்கு. பிறவி நீக்கம் எப்போது வரும்? ஆசைகளும் அவாக்களும் உள்ளவரை பிறவி நீங்காது. பொறிகள், புலன்கள் துய்ப்பனவெல்லாம் துய்த்து அவ்வழி அவா நீங்கப் பெற்றனவாய் விளங்க வேண்டும். ஆன்மா புலன்கள் வழி, பொறிகள் வழி கடவுட் காட்சியை அனுபவிக்கும் தகுதி பெற வேண்டும். இத்தகுதி எளிதில் அமைவதில்லை. உடல் ஒரு துய்ப்புச் சாதனமே! துய்ப்பினை மறுத்துத் துறவு மேற்கொண்டாலும் துறவு முழு நிலையில் கைகூடுமா? துறவு, விருப்பு-வெறுப்புக்களினின்று விடுதலை பெற்றிருக்கிறதா, இல்லையே! துறவு, மதத்துடன், மடங்களுடன், ஆசிரமங்களுடன் பிணைந்துவிட்டதால் துறவு உணர்வு பூர்வமாக இல்லையே! துறவிகளுக்குள் நடந்த சண்டை, சச்சரவுகளே இல்லையா? நிறைய உண்டு! ஆதலால், துறவு என்பது புலனடக்கம் மட்டும் அல்ல;

கு.இ.VIII.20.