பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

305


நாங்கள் புகழ்ந்து பாடக்கேட்டும் துயில்கின்றாயோ? நின் செவி வன்செவியோ? திருவீதியில் சிவபெருமானை வாழ்த்தும் வாழ்த்தொலி கேட்ட அளவில் படுக்கையினின்றும் புரண்டு எழுந்து விம்மி விம்மி அழுகின்றாள்! தன் நிலை இழந்தாள்! இவள் எச்செயலுக்கும் ஆகாள்! இவள் நிலை வியப்பிற்குரியது-” என்று பாடுகின்றனர்.

இறைவனுக்குத் தொடக்கமில்லை; இறுதியும் இல்லை. தோன்றுவன வெல்லாம் அழியும் என்பது நியதி. இறைவனை ஞானப்பேரொளியாக-அகண்ட ஒளியாக வழிபடுதல் வழக்கம். “அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்” என்பார் தாயுமானார். இறைவன் அரும் பெரும் சோதியாக விளங்குவதைப் “பசுபதியாகிய இறைவா! கதிரவன் மண்ணகத்தைச் சூழ்ந்துள்ள இருளையோட்டிக் காண்பார் கண்களுக்கும் புலனாகின்றான். ஆனால் நீயோ, அக்கதிரவனைப் போல நூறாயிரங்கோடி ஒளிக்கதிர்களையுடையனாக இருந்தும் என் கண்களுக்குப் புலனாவதில்லை. என் அகவிருள் வலிமையுடையதோ? அன்று. அன்று! நின் கருணைப் பெருக்கு முழுதுமாகத் தேவை” என்று ஆதிசங்கரர் கூறுவதால் அறிக!

சிவபெருமானை வாழ்த்தும் வாழ்த்தொலி கேட்டதும் படுத்திருந்தவள் ஏன் வரவில்லை? அவள் உறங்கவில்லை; வாழ்த்தொலியைக் கேட்ட அளவிலேயே பக்தியில் மன முருகி மெய்ம்மறந்து கிடக்கிறாள்! அவள் திருவருள் வயப்பட்டு விட்டாள்! இனி உலகியலுக்கு ஆகாள் என்பது கருத்து. உறக்கத்தைத் தவிர்ப்போம். உளம் உருகி வழிபடுவோம்!

பாசம் பரஞ்சோதிக் கென்பா யிராப்பகல் நாம்
பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
நேசமும் வைத்தனையோ? நேரிழையாய் நேரிழையீர்
சீசி! யிவையுஞ் சிலவோ? விளையாடி