பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

307


கின்றனரேயன்றி, வாழ்த்துதல் நோக்கமன்று. ஆதலின், வானவர் வாழ்த்தினைக் கண்டு இறைவன் நாணுகின்றான். அமரர்கள் திருவடிகளைப் பெறுதல் இயலாது. அதே திருவடிகள் எளிதில் நம்மை நாடிவந்து ஆட்கொள்கின்றன. “தந்தருள வந்தருளும்” என்று எளிமையும் விளக்கப் பெறுகிறது.

“பாசம் பரஞ்சோதிக்கு என்பாய்” என்றதாய்” “சொல்லும் நீ, செயலுக்குரிய காலத்தில் தவறுகிறாய் என்று உணர்த்தப் பெறுகிறாள். சொல்பவர்கள் பல செயலில் சிலர் கூடக் காண்பது அரிது. வைகறைப் போது இறைவணக்கத்திற்கேற்ற இனியபோது, ஆரவாரமுடைய புறவுலகம் மோனத்தில் அமிழ்ந்திருக்கும் அந்த நேரம் இறை வழிபாட்டுக்கு உற்ற நேரம்.

இப்பாடல், உயிர்களின் பிறப்பின் நோக்கத்தை இறைவனைப் பூசித்து இன்ப அன்புநிலையை எய்திடுதல் வேண்டும். அதுவே பிறப்பின் குறிக்கோள்! அக்குறிக்கோளினின்றும் பிறழ்ந்து வாழ்வெனும் மையலிற் சிக்குண்டு கிடக்கும்பொழுது ஞானாசிரியன் கருணையோடு கடிந்துரைத்து ஈடேற்றுதல் வழிவழிவந்த வழக்கம். அதுவே தந்தருளும் நிலை; இறைவன் எளிமையில் தந்தருளுகின்றான்; அவ்வருளைப் பேண-பாவை நோன்பு நோற்றிடுவோம் வாரீர்! வாரீர்!

முத்தன்ன வெண்ணகையாய்! முன்வந் தெதிரெழுந்தென்
அத்தனா னந்த னமுதனென் றள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீ ரீசன் பழவடியீர்! பாங்குடையீர்!
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ?
எத்தோதின் னன்புடைமை? யெல்லோ மறியோமோ?
சித்த மழகியார் பாடாரோ நஞ்சிவனை?
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்.

3