பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



உடல், உயிர், உடைமைகளைக் கருவியாகக் கருதாமல் பயனாகவே எண்ணி வாழ்தல் தவறு. இறைவன் எப்போதும் நன்றே செய்வான். ஆன்மாக்களின் பழக்க வாசனையால் நன்மையும் தீமையாகப்படுகிறது.

இதனையே “நன்றே செய்வாய்? பிழை செய்யாய்?” என்றார். “இன்று ஓர் இடையூறு எனக்குண்டோ?” என்றது அரசனால் வரவிருக்கும் இடையூற்றை எண்ணிக் கூறினார் போலும்.

நரி பரியாக்கியது

இறைவனிடத்தில் தன்னை ஒப்படைப்புச் செய்து விட்டதால் மாணிக்கவாசகர் தன் பிறவி, பிறவித் தொடர்பான கடமைகள் அனைத்தையும் இறைவன் வசமே ஒப்படைத்துவிட்டார். ஆதலால், அரசனுக்குப் பதில் கூறவேண்டியது என் அதிகாரத்தில் இல்லை என்ற பொருள் பட “என்னதோ இங்கு அதிகாரம்?” என்று கேட்கிறார்.

இறைவன், “ஆவணி மூல நன்னாளில் குதிரைகள் வரும் எனச் சொல்லி அனுப்புக!” என்று உத்தரவு தருகிறான். மாணிக்கவாசகர் அவ்வண்ணமே குதிரைகள் வரும் என்று திருவருளாணைவழி ஓலை அனுப்புகிறார்.

இறைவன் குதிரைகளுடன் தான் பின்னே வருவதாகவும் மாணிக்கவாசகரை முன்னே செல்லும்படியும் ஆணை பிறப்பிக்கின்றான்.

மாணிக்கவாசகர் அவ்வாறே மதுரைக்கு வந்து அரசவையை அணுகிக் குதிரைகள் வரும் செய்தியை அறிவிப்பதோடன்றி நல்ல குதிரைகளாக, விரைந்து செல்லும் குதிரைகளாக வரும். இதனால் நீ “துரகபதி” யெனப் பெருமையடைவாய் என்றும் கூறினார்.

நாள்கள் உருண்டோடின. குதிரைகள் வரவில்லை. அரசன் சினம் கொண்டான். மாணிக்கவாசகரைக் கொடுந்