பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இத்திருப்பாடல் முத்திநிலை யெய்திய பெண் பாடிய பாடல். இத்திருப்பாடல், உயிர் இறையருளிற் கலந்து நின்றிடும் இயல்பினை விளக்குகிறது; ஆண்டவன் திருவடிகளே தீர்த்தம் என்று கூறுகிறது. ‘அண்ணமலையான்’ என்பது அண்ணாமலையையே குறிக்கும். திருவண்ணாமலையிலுள்ள திருமலை, ஞானத் திருமலை! அதுவே சிவம்! அம்மலையைத் தொழுதலே பேறு. அதாவது, இறைவன் அமரர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவுக்குச் செந்தீ மலையாக உயர்ந்து, அண்ணாமலையான பின்பே தலம், திருவண்ணாமலையென்று பெயர் பெற்றது. தலத்தை வைத்து மூர்த்திக்கு வந்த பெயரன்று; மூர்த்தியை வைத்துத் தலத்திற்கு வந்த பெயர்.

இறைவன் உயிர்களுடன் உடனாகி, வேறாகி, ஒன்றாகி ஆட்கொண்டருளும் படிநிலைகளைப் பாடல் விளக்குகிறது. “பெண்ணாகி, ஆணாய், அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி, மண்ணாகி” என்று குறிப்பிட்டதால், இத்திருவுருவங்களில் உயிர்களோடு உடன் சேர்ந்து நின்று, ஊட்டி, மலம் நீக்கும் கருணைத் திறம் ஓர்க! இக்குறிப்பிலேயே.

“.....................
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய்என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்துநீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே”

என்றார் அப்பரடிகள்.

“இத்தனையும் வேறாகி” என்றதால், வேறாய் நின்றும் “கண்ணாரமுதமாய்” என்றதால் ஒன்றாகியும் உயிர்களை ஆட்கொள்ளும் திறன் அறிக, உயிர்களோடு திருவருள் உடனாதல் மூலம் வேறுபாடின்றி நம்பிக்கைக்குரியனவாகி