பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

347


திசையை–கீழ்த்திசையை அணுகினன்; இருள் அகன்றது; உதய ஒளி எங்கும் பரவிற்று. நின் திருமுகத்தின் அருளைப் போலக் கதிரவன் ஒளி மேலுயர்ந்து வரவரத் தாமரைகள் மலர்கின்றன; வண்டுகள் ஒலிக்கின்றன. பள்ளியெழுந்தருள்க! திருவருளினைத் தந்திடுக!”

இறைவன், பிறவிப்பிணியின் மருந்து என்பதை உணர்ந்த “பேரின்ப மலையே”, என்றும் இறப்பிற்கு மருந்து திருவருளே என்பதை உணர்த்த ‘அலை கடலே’ என்றும் வாழ்த்தினார்.

அருணோதய நேரத்தில் செய்யும் வழிபாட்டினால் அக இருள் நிங்கும்; ஞானம் கைகூடும். காண்பானும் காணப்படும் பொருளும் வேறுவேறாக இருந்து கலப்பால் ஒன்றானபோதே இன்பம் விளையும். சுவைப்பானே சுவையாயின் நுகர்ச்சி ஏது? கற்கண்டைச் சுவைக்கும் மனிதன், கற்கண்டாகவே ஆகிவிட்டால் சுவை ஏது? எந்நிலையிலும் இறையும் உயிரும் வேறுவேறு பொருள்களே!

இத் திருப்பாடலில் ‘அருணன் கீழ்த்திசை அடைந்தான்’ என்றதால், அருட்சக்தியின் வெளிப்பாட்டையும், ‘இருள் போயிற்று’ என்றதால் துன்பமல நீக்கமும் ‘உதயம் அகன்றது’ என்றதால் சிவஞானம் பரவிற்று என்பதும். ‘திருமுகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக் கடிமலர் மலர’ என்றதால் சிவ தரிசனமும் திருவருட்பேறும் கிடைத்தன என்பதும். ‘கண்ணாம் அறுபதம் முரல்வன’ என்றதால் அதில் நுகரும் வண்டுகளாக அடியார் கண்கள் அமைந்துள்ளன என்பது உணர்த்தியமை அறிக!

இத் திருப்பாடலில் உலகியலும் அருளியலும் ஒப்புமையாகப் பேசப்படுகிறது. கதிரவன் கீழ்த்திசையில் எழுவதால் புறத்திருள் நீங்குகிறது. கண்ணுதற்பெருமான் கருணை அகத்தில் எழுவதால் அகஇருள் நீங்குகிறது, புறத்தே கதிரவன் எழுவதால் ஒளி பரவுகிறது. கண்னின் ஒளிக்குக்