பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர்

29


திருவாசகத்தேன்

மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகத்தை ‘திருவாசகத்தேன்’ என்று கூறுவர். தேன் உணவு, தேன் மருந்து, தேன், செல்வர்களுக்கு உணவாகவும், மருந்தாகவும் பயன்படும்; ஏழைகளுக்கு மருந்தாகப் பயன்படும்.

திருவாசகம், சிவஞானிகளுக்கு மேலும் மேலும் சிவஞானம் பெருகி வளரத் துணை செய்யும்; ஆணத்தின் ஆதிக்கத்தில் இருப்பவர்களுக்கு மருந்தாகப் பயன்படும். திருவாசகம் பயிலுதல், ஓதுதல் மருத்துவம் போன்றதாகும்.

மாணிக்கவாசகராகிய வண்டு சேகரித்தது திருவாசகத்தேன்; மாணிக்கவாசகராகிய வண்டு சிவம் என்கிற பரம் பொருளின் திருவடித் தாமரைகளில் மட்டுமே உட்கார்ந்து சேகரித்த ஒரு பூத்தேன். வேறு எந்த மலரையும் (வேறு எந்த தெய்வத்தையும்) மாணிக்கவாசகர் அணுகவில்லை.

“கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடி யாரொடல் லால் நரகம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே இயக்கப் பெறின் இறைவா
உள்ளேன் பிற தெய்வம் உன்னையல் லாதெங்கள் உத்தமனே!

(திருச்சதகம்–2)

என்பது திருவாசகம். நரகமே புக நேரினும் சிவனைத் தவிர வேறு தெய்வத்தைத் தொழ உடன்பாடிலாத உறுதிப்பாட்டை உன்னுக; எண்ணுக!

வினைக்கேடன்

மாணிக்கவாசகர் அமைச்சராக இருந்தவர். அவர் மேற்கொண்ட செயல்கள் எத்தனை, எத்தனை! அவர் வினைகளிலேயே மூழ்கிக் கிடக்க வேண்டியிருந்தது! இந்தச்