பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34


பணிசெய்க!


ஆன்றோர்கள் தம்முடைய வாழ்க்கை அனுபவத்தின் விளைவாக அருளிய முதுமொழிகள் நம்முடைய தாய் மொழியில் ஏராளம். அவற்றைச் சிந்தித்து வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால் அவலம் தொலையும்; அமைதி தோன்றும். சிறப்பாக அப்பரடிகள் “என்கடன் பணி செய்து கிடப்பதே” என்றருளிச் செய்துள்ளார். இந்த ஓர் அடியில் ஓராயிரம் ஆண்டு முயன்று பெறக்கூடிய அனுபவ ஞானத்தை - வாழ்க்கையை இன்ப மயமாக்கிக் கொள்ளும் அறிவைத் தந்துள்ளார். கடமை என்பது மனித வாழ்வின் குறிக்கோள். கடமையைக் கடமைக்காகவும், நன்மையை அது நன்மை என்பதற்காகவுமே செய்ய வேண்டும். (“நன்மைக்காகவே நன்மையை நாட வேண்டுமே யொழிய வேறொன்றுக்குச் சாதனமாக இருப்பதற்கல்ல”) என்ற அரிஸ்டாட்டலின் அறிவுரை சிந்தனைக்குரியதாகும்! கடமையைச் செய்வதில் எதிரொலியான விளைவுகள்-பலாபலன்கள் பற்றி எண்ணினால் கடமையாற்றலின் தரமும் தகுதியும் குறையும். மேலும் கடமையின் நிழலாகத் தன்னலம் தோன்றி வளர்ந்து, பின் கடமையுணர்வையும் மறைத்து அழித்து ஆதிக்கம் செய்யும். கடமைகளைச் செய்வதையும் கூட