பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

243


இணைந்தவை; பிரித்தற்கியலாதவை. இறைவனை வாழ்த்து வோர் வளமோடு வாழ்வர்! இஃது இயற்கையின் நியதி! ஆனால், எப்படி வாழ்த்துவோர் வாழ்வர்? எப்படி வளமோடு வாழ்வர்; நம்பியாரூரர் இத்திருப்பதிகத்தில் சமய நெறியை இறைவனை வாழ்த்தும் நெறியை விளக்கியருளி யுள்ளார்.

"சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து
திறம்பா வண்ணம்”
"விருந்தாய சொல்மாலை கொண்டேத்தி வினைபோக
வேலி தோறும்"
"பொய்யாத வாய்மையால் பொடியூசிப்
போற்றிசைத்துப் பூசை செய்து"
இலமலிந்த மழுவானை மனத்தினால் அன்பு செய்(து)
இன்ப மெய்தி"

என்று வரும் தொடர்கள் நினைந்து நினைந்து படிக்கத் தக்கன ஒதுதலுக்குரியன உணர்ந்து ஒழுகுதற்குரியன. இந்தத் தொடர்களின் உணர்த்தப் பெறும் சமய வாழ்க்கை, வாழ்த்தும் நெறி இன்று உள்ளதா? எங்கிருக்கிறது? இன்று அன்பு நெறியாக, தொழும் நெறியாக, வாழ்க்கை நெறியாக இருந்த சிவநெறியை "இந்து சமயம்" என்ற கலப்பு - வெற்றுச் சடங்குச் சமயமாக ஆக்கிவிட்டது. அதனால், வழிபாடும் முறையாக இல்லை; வளமும் இல்லை!

வழிபாட்டில் முதல் நெறி-உற்றிருந்து நினைத்தல், அதாவது தனக்குள்ளேயே இறைவனைநாடுதல், விறகில் தீ, வெளிப்புறத்தில் இல்லை; விறகுக்குள்தான்! பாலில் நெய், பாலுக்குள்தான்; பாலுக்கு வெளியே இல்லை! அதுபோல இறைவன் ஒவ்வொருவர் உயிருக்குள்ளும் உயிர்க்கு உயிராக விளங்குகின்றான்! தனக்குள், தனது உயிர்க்கு உயிராக இருக்கும் இறைவனைத் தேடும் முயற்சியில் ஈடபடுவோரைக் காணோம்! வெளியிலேயே தேடுகிறார்கள்! அதனால்