பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணச் சொற்பொழிவுகள்

33



"...................................................யாரேனும்
வேண்டும் யாவையும் இல்லை.என் னாதே
இக்கடற்படி நிகழுமுன் கொடுக்கும்
இயல்பின் நின்றவர் உலகியற் பகையார்"

(2)

என்ற அடிகளால் அறியலாம். எம்பெருமான், அடியார்கள் அன்பினை உலகோர் உணர, அளந்து காட்டி அவருள் நின்று அனுபவிப்பவர். அங்ஙனம் அவர் அளக்கும் பொழுதெல்லாம் அன்பு, ஆரா அன்பாக முறுகி வளர்கிறது. எம்பெருமான் துார்த்த வடிவத்தில் வந்து இயற்பகையாரை அணுகி, "இரக்க வந்தனம்" என்றார். இவ்வாறு ஒருவர்வந்து இரப்பின் அது கேட்ட யாரும், "நியாயமாகத் தகுதியுடையதைக் கேள். இயன்றால் தருவேன்” என்று கூறுவதே எதிர்பார்க்கக் கூடியது. ஆனால், இயற்பகையாரோ,

"யாதும் ஒன்றும்என் பக்க லுண்டாகில்
அன்னதெம்பிரான் அடியவர் உடைமை
ஐயம் இல்லைநீர் அருள்செய்யும்”

(7)

என்று கூறுகிறார். இந்த ஒரு பதிலில் ஒன்றுக்கு மூன்றாக, உறுதிச் சொற்களை அடுக்கித் தமது, இல்லையெனாது ஈயும் ஒழுக்கத்தை உறுதி செய்கிறாா் இயற்பகையார். இங்கே இயற்பகை நாயனாரின் ஈதற்குரிய வரையறை இரக்கப்படும் பொருள் அவர்பால் இருக்கவேண்டும் என்பது ஒன்றேயாம். அதுவும்கூட இயற்பகையார் கொடுக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அப்பொருள் இரக்கப்பட்டவுடன் உடைமையின்மீது தமக்குரிய உரிமையை விலக்கிக் கொண்டு, இரப்பவரின்-அடியவரின் உடைமையாக்கி விடுகிறார். வந்த தூர்த்தர், கேட்கக்கூடாத ஒன்றைக் கேட்டுவிட்டார். கேட்டதில் வேண்டுமானால் குறையிருக்கலாம். அதுவுங்கூடக் கேட்ட சொல்லளவில்தான் குறை; சிந்தையிற் குறையில்லை; செயலிற் குறையில்லை! ஏதாவது ஒன்று குறையா, நிறையா என்பதையறியச் செயல்மட்டும் அளவன்று, அச்செயலின்