பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

誇ひ குன்றுடையான் "குன்றுடைகான்’ தோன்றினும், "கலையின் மூலம் பிறரது உணர்ச்சிகளைப் பெறுகின்ற சக்தி மனிதனுக்கு இருப்பதாலே, அவனது காலத்தில் வாழ்ப வரின் உணர்ச்சிகள் யாவும் அவனுக்குக் கிடைக்கின்றன. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் பெற்ற உணர்ச்சிகளும் அவனுக்குக் கிடைக்கின்றன. தமது சொந்த உணர்ச்சிகளைப் பிறருக்குப் பரவச்செய்யும் வாய்ப்பும் இருக்கிறது' என்ருர் ருஷிய மேதை. லியோ டால்ஸ்டாய், கம் காலத்தில் வாழுகின்ற மக்களின் உணர்ச்சிகளுக்கும், நிகழ்ச்சிகளுக்கும், கலைவடிவம் கொடுத்து மேடையேற்றும் பொழுது அது சமூக நாடகமாகிறது. சென்றகாலத்தில் வாழ்ந்த மக்களின் உணர்ச்சிகளுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் கலேவடிவம் கொடுத்து மேடையேற்றும் போது அது வரலாற்று நாடகமாகிறது. முன்னதைக்காட்டிலும் பின்னதைச் செய்து முடிப்பதில் ஆசிரியனது ஊன்றிய கருத்தும் உழைப்பும் அதிகம் தேவை: இதனில் ஓரளவு பயிற்சி எனக்குண்டு. சிறந்த வரலாற்று நாட கம் வரைகின்ற தகுதி எனக்கு இருக்கின்றதோ இல்லையோ, விருப்பமும் வாய்ப்பும் இருக்கின்றன. தமிழ்நாட்டில், குறிப்பாகக் கொங்குகாட்டுச் சிற்றுார். ஐபஞர்களில் பல வகுப்பினர் குன்றுடையானையும், அண்ணன் மார்களையும் குலதெய்வங்களாய்க் கொண்டு வழிபடுகின்றனர். மிகப் பலவூர்களில் கூடங்களும், சின்னங்களும் உள்ளன, "தெவம்’ என்ற பெயரால் விழாக்கொண்டாடுகின்றனர். சாதி வேறுபாடும். பகைமையும் கடக்க இந்த வீரவழிபாடு, தமிழ் காட்டில் தனிப் பண்புக்குரிய வியப்புறு காட்சியாகும். எனது பிள்ளைப் பருவத்திலேவிழாவினைக்கண்டதன் மூலம்