பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுடையான் 7 7 எழுந்த கேள்விக்கு, என் அன்னை சொன்ன விளக்கமாகக் கேட் டிருக்கிறேன். அண்ணன்மார் கதையினே, பின்னர் கான் படித்த நூல்களிலே, பல படிவங்களிலே கண்டேன்.குறிப்புகள் எடுத்து வைத்தேன் உதவிய நூல்களிலே குள்ளம்பட்டியில் திரு ப, இராமலிங்கம் அவர்கள் மூலமாகக் கிடைத்தரட்டுச்சுவடியும், மற்றும் 'கொங்குமண்டல சதகம்' 'கொங்குகாட்டு வரலாறு' "கள்ளழகர் அம்மானை' 'கொங்குச் செல்வி "கொங்குநாடு: இதழ்த்தொகுப்பு ஆகியவையும் குறிப்பிடத்தக்கனவாகும். இவைகளன்றி பம்பைக்காரர்கள் பாடுகின்ற அண்ணன் மார் கதையும், பாட்டுக்காரர்கள் ஆடுகின்ற குன்றுடையான் கூத்தும், தெவத்துக்குச் செல்லுகையில் சிலம்பொலித்துப் காடுகின்ற வீரப்பாடல்களும் உண்டு. இவற்றில் பெரும்பாலும் கடுகை மலையாக்கும் கற்பனைச் சுவடுகளே காணப்படுகின்றன. கோவை கிழார், முதுபெரும் தமிழர் திரு. சி. எம் இராமச் சந்திரனர் பி. ஏ. பி. எல். அவர்கள் கொடுத்த ஆராய்ச்சி பூர்வ மான கருத்தும்,திருப்பூர்.திரு. பழனிசாமிப் புலவர் அவர்களின் "கொங்குச் செல்வி'தந்த விளக்கமும் குன்றுடையான் கதைக்கு அடிப்படையாக அமைந்தன. எழுதி முடித்தேன். எனினும் என் மனக் கிறைவு பெறவில்லை. . பம்பைக்காரர் பாட்டு முழுதும் ஒருமுறை கேட்க விரும்பி னேன். எனது கண்பர் கல்லிபாளையம் திரு. க. பத்மராசு அவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். பல்பைக்காரர் வாழும் காமக்கல் பழையபாளையத்தில், கூட்டுறவு காணய சங்கத் தலைவர் கண்பர் திரு.வி.இரங்கராசு அவர்கள் இல்லத்தில் தங்கி, பம்பைக்காரர்களை மூன்று பகல் இரவுகள் பாடவைத்துக் குறிப்புகள் எடுத்தேன். அவை பெரும் பாலும் புராண மரபில் கள்ளழகர் அம்மானையை ஒத்திருந்தன, எனினும் அவர்கள் பாடிய பாங்கு கேட்போர் உள்ளத்தில் வீரம் விளப்பதாயிருந்தது.