பக்கம்:குப்பைமேடு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம் fo? 'இலக்கிய ரசனை?' 'அந்த வாசனையே பிடிக்காது' 'கோயில் சினிமா' 'ஓய்வாக இருக்கும்போது அழைத்துப்போவான்" 'திருக்குறள்?' 'அதை அடிக்கடி ஒப்புவிப்பான்' 'பண்பாடு மிக்கவன் என்று தெரிகிறது' 'எனினும் அவள் மனம் புண்படும்படி எப்படி நடந்து கொண்டான் அது தென்படவில்லை' என்றார். 'குட்டி போட்ட பூனை மாதிரி பானுவைச் சுற்றிச் சுற்றி வருவான்'.

  • பின் ஏன் இவளுக்குப் பிடிக்கவில்லை.

'அப்பாவைக் கேட்காமல் அவர் ஒரு காசுகூட செலவு செய்ய முடியாது என்பது'. என்னதான் இருந்தாலும் சுய சம்பாதனை இல்லாத மனிதன் சுயமரியாதையோடு வாழ முடியாது என்பது அவள் சுய சிந்தனையாக இருக்கிறது. அதற்குப் பிறகு இரண்டு வீட்டாருக்கும் யுத்தம் தடந்து கொண்டு இருந்தது. வக்கீல்களைக் கொண்டு நோட்டீசுகளைப் பறக்க விட்டார்கள். உறவு இழுபறி என்று இழுத்துக்கொண்டு இருந்தது.வக்கீல்களும்கைவிட்டு விட்டார்கள். எந்த நேரத்திலும் உறவு அறுந்து போக லாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/109&oldid=806144" இலிருந்து மீள்விக்கப்பட்டது