பக்கம்:குப்பைமேடு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

ராசீ

நடந்தது என்று கேட்டு விடாதீர்கள்; அது இங்கே எடுக்கப்படவே இல்லை; பெயர் மட்டும் அண்ணாநகர்க் குறுக்குத்தெரு; அதை வைத்து புரோக்கர் கட்டி விடும் கதைகள் இவை.

இங்குக் குடி இருப்பவர்கள் கதம்பப்பூக்கள்; நிறம் வேறுபட்டவர்கள்; மாநிலம் மாறுபட்டவர்கள்; அவர்கள் வெளி மாநிலத்தவரோடு பேசிக் கொள்வார்களே தவிர உள்நாட்டு மனிதரோடு ஒட்டமாட்டார்கள். ஹெலிகாப்டரில் தான் வெளியே பறப்பார்கள் அதனால் இங்கே வந்து விசாரிக்க வேண்டாம்.

எனக்கு எழுத்து ஒரு தொழில் ஆகி விட்டது. இதை நம்பி வாழ முடியுமா! எழுத்தும் என்னை நம்பி வாழ்கிறது; அதனால் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

‘படத்துக்குக் கதை எழுதுகிறாயா?’ அது அவர்களுக்குத் தேவை இல்லை. அது இல்லாமல் தான் படம் எடுக்கிறார்கள். அவர்களுக்கு என் கதை பயன்படாது.

“எழுதி என்ன செய்யப்போகிறாய்?” அச்சிட்டு என் வீட்டை நூலகம் ஆக்கி வைப்பேன்; புரியவில்லையா? அடுக்கி வைப்பேன். விற்பனையாகாவிட்டால் என் வீடு குப்பைமேடு ஆகிவிடும்.

இது ஒரு சூதாட்டம்; தெரிந்து விளையாடுகிறேன் யாராவது கேட்டால் “எழுதுகிறேன்” என்பேன்; யாரும் தொல்லை கொடுப்பது இல்லை. சாக விடுங்கள் என்று ஒரு நோயாளியைப் பார்த்துச் சொல்வது போல என்னை “எழுத விடுங்கள்” என்று சொல்லி நீங்கி விடுவார்கள் எனக்கு வேண்டியவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/12&oldid=1112413" இலிருந்து மீள்விக்கப்பட்டது