பக்கம்:குப்பைமேடு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

ராசீ

அவர் கொஞ்சம் வியாபாரம் பேச வந்தவர் போல் நேரிடையான பேச்சுக்கு வந்தார்.

"ஒரு பெண்ணை வற்புறுத்தி வரவழைக்க அதற்குக் கோர்ட்டின் துணையை நாடுவது சட்டத்தின் பேரில் ஆக்கிரமிப்பு' என்றேன்.

"கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா என்று கேட்டார்.

"தாம்பத்திய உறவு வேண்டும் என்று நோட்டீசு தந்தீர்களே அதைத்தான் கூறுகிறேன்' என்றேன்.

'நானா கேட்டேன்' என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.கேட்டது அவர் மகன் என்பதைப் புரிய வைத்தார்.

'குதிரையை நீர் தண்ணிர் இருக்கும் இடத்துக்கு இழுத்துச் செல்லாம்; ஆனால் அதைக் குடிக்க வைக்க முடியாது' என்றேன்.

'அங்கே நிறுத்தி வைத்தால் தாகம் எடுத்தால்தானே குடிக்காமல் வேறு என்ன செய்ய முடியும்' என்றார்.

அதுவே விரும்பினால் நீர் நிலைக்குச் செல்வது தான் நல்லது. வற்புறுத்தக் கூடாது ' என்று வாதாடி னேன்.

எதிரே ஒரு இந்தி பேசுகிற வசந்தி என்ற பெண்" என்று சொல்லியிருக்கலாம்; என் நாவுக்குக் கொஞ்சம் கிறுக்கு; மங்கை' என்று சொன்னால்தான் அதுக்குப் பிடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/120&oldid=1115454" இலிருந்து மீள்விக்கப்பட்டது