பக்கம்:குப்பைமேடு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

ராசீ


சார் நீங்க கொஞ்சம் வாயை மூடிக் கொள்கிறீர் களா? என்று என்னிடம் கடுமையாக நடந்து கொண்டான்.

நானும் அவசரப்பட்டுவிட்டேன். அவர்கள் தம் மரு மகள் மீது கொண்ட பாசம் அன்பு ஆழமானது; தம் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகவே கருதி வந்தார்கள் என்பது தெரிந்தது. பேசுவதும் புத்தி சொல்லி அனுப் புவதும் என்று தீர்மானம் செய்து கொண்டேன்.

'விவாகரத்து செய்து விட்டால், அவளுக்கு ஜீவனாம் சம் தரவேண்டுமா?' என்பது பெரியவர் கேள்வி.

அவளாகக் கேட்பதால் கொடுக்கத் தேவையில்லை. என்றார் வக்கீல்.

அப்படியானால் அதற்கு வழி செய்து விடுங்கள்: பேசாமல் நல்ல இடத்தில் பார்த்துக் கொள்ளலாம், என் றார் பெரியவர்.

'பானு மிதித்த இந்த வீட்டுக்கு எந்த மானும் மரு மகளாக வர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்' என்றார் அந்தப் பெரியவரின் மனைவி.

எதுகை நயம் தோன்றப் பேசியது வியப்பைத் தந்தது.

எந்தச் கழுதையும் என்று சொல்லி இருந்தால் சரியாக இருந்திருக்கும்.

"சட்டம் அவர்கள் பக்கமாகத் தான். குழந்தையை நாம் பெற முடியாது'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/144&oldid=1115631" இலிருந்து மீள்விக்கப்பட்டது