பக்கம்:குப்பைமேடு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

ராசீ

தூங்கிக் கொண்டு இருக்காமல் வாழுங்காலத்து மனிதர் களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதால் என்ன பயன்? நான் என்ன கதை எழுதவா போனேன் என்றாலும் இந்தப் பெண்ணின் கதையில் ஒரு மர்மம் இருக்கத்தான் செய் கிறது. ஏன் இவள் விவாகரத்து கூறுகிறாள். அதை விலக்க வழி உண்டா? இதைப்பற்றி என் மனம் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு குடும்பத்துக்கும் ஒற்றுமை உண்டாக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.

கண்ணால் காண்பது பொய்; காதால் கேட்பது பொய்; தீர விசாரிப்பதே மெய் என் நண்பன் மனைவி அவள் வரதட்சணைக் கொடுமையால் தீக்குளித்தாள் என்று செய்தி பரவியது; அவள் செத்ததோடு புருஷனை யும் மாட்டி விட்டாள். தீர விசாரித்ததில் உண்மை விளங்கியது. இப்படி எத்தனையோ தீக்குளிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. காரணம் 'வரதட்சணை கொடுமை' என்று சொல்லி அப்பாவிகள் இழுத்து வரப் படுகின்றனர். அலைக்கழிக்கப்படுகின்றனர்.

பணக்காரர்கள் என்றாலே கெட்டவர்கள் என்று நினைப்பது எவ்வளவு தவறு என்பது இராமானுஜம் தெருவுக்குப் போன பிறகுதான் தெரிந்தது. பக்தி, அன்பு, பாசம் விருந்தினர் உபசரிப்பு, பிறரை மதித்து நடப்பது எல்லாம் அந்தக் குடும்பத்தில் என்னால் காண முடிந்தது. நல்ல பணிவுகள் வளரப் ப ண ம் அடிப்படை, தாராளமாக இருக்க வேண்டுமானால் பலவும் வேண்டும். எந்த ஏழை மற்றவர்களுக்கு உதவுகிறான் உதவ நினைக்க லாம். ஆனால் அவன் உதவமுடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/148&oldid=1115599" இலிருந்து மீள்விக்கப்பட்டது