பக்கம்:குப்பைமேடு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீற்றம்

169

ஆறுமுகத்தின் அச்சகம் திடீர் என்று சுருசுருப்பை எட்டியது. ஒவர் டைம்' செய்து தொழிலாளர்கள் காசு மிச்சப்படுத்தி வந்தார்கள். இந்த அச்சகத்துக்கு வேலை செய்வதற்கு அடுத்த அச்சகத் தொழிலாளர்களும் ஆர்வம் காட்டினர்.

மகளிர் குரல் என்று ஒரு பத்திரிகை இங்கு அக்சிடப் பட்டது. அதில் அவ்வப்பொழுது நீதிமன்ற வழக்குகளும், வக்கீல்களின் வாதமும், அஞ்சலையின் பிடிவாதமும் மாதா மாதம் வெளி வந்து கொண்டிருந்தன. மகளிர் இயக்கம் ஒன்று உருவாக்குவதற்கு இப்பத்திரிகை மிகுதியும் துணை செய்தது.

இந்தக் குழந்தையைச் சுற்றியே வாதம் நீண்டு கொண்டிருந்தது.

'குழந்தையை யார் வைத்துக் கொள்வது'.

'தொட்டியில் போட்டு விடலாம்” என்று பட் டென்று பேசினாள் உதயபானு.

'உனக்கு ஏன் இந்தக் கெட்ட எண்ணம்' என்று. கேட்டனர்.

அவள் ஏன் இப்படி மிருகமாக மாறினாள் என்பது இப்போதுதான் விளங்கியது.

'இந்த நாட்டில் ஒரு பெண் பிறக்க வேண்டுமானால் அது லட்சங்களோடுதான் பிறக்க வேண்டும். லட்சணத் தோடு பிறக்கத் தேவை இல்லை' என்ற கொள்கை உரு

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/171&oldid=1115629" இலிருந்து மீள்விக்கப்பட்டது