பக்கம்:குப்பைமேடு.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அதிர்ச்சி
175
 

"உனக்கு யார் இந்த ஐடியா கொடுத்தது?

"மேல் நாட்டிலே முதியவருக்கே மருத்துவமனைகள் நிறைய இருக்குது. இங்கே இல்லை. இங்கே தேவை இல் லாமல் இருந்தது. இன்னிக்கு மருத்துவம் முன்னேறி விட்டது. வாழ்நாள் அதிகமாகிவருகிறது".

"இவங்க எல்லாம் இருந்து என்ன செய்யப் போறாங்க?"

"யார் தான் இருந்து என்னத்தைச் சாதிச்சிக்கிட்டு இருக்காங்க? மக்கள் தொகை பெருகிவிட்ட தேசத்திலே மனுஷனுக்கு மதிப்பே கிடையாது. சின்னவங்களும் ஒன் னும் செய்றது இல்லை; உக்காந்துக்கிட்டு சாப்பிடுதுங்க வயசுகளும் வெற்றுக்கு வாழ்ந்துகிட்டிருக்கு' என்று அவன் பார்வையில் பட்டதைச் சொல்லுகிறான்.

"வேலை இல்லை".

‘'வேலை இருக்குது.

ஒய்வை அதிகம் விரும்புகிறான். அதிலே சுகம் கண்டு விட்ட தேசம் இது.

"எப்படி சொல்றே?"

"நாங்க எல்லாம் வெளி தேசத்துல சமையலுக்கு ஒத் தாசையாய் இருக்கிறோம். நாங்களே சில சமயம் செய்து விடுகிறோம். இங்கே எத்தனை ஆண்களுக்குச் சமையல் தெரியும்?