பக்கம்:குப்பைமேடு.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
178
ராசீ
 

" நிச்சயம் வாங்க மாட்டார்கள். இதைவிடப் பெரிய காண்டிராக்ட், லைசன்சு, பர்மிட்டு அதிலே கிடைக்கும் போது இதிலே ஏன் வாங்கப் போகிறார்கள்?' என்றேன்.

"விசயம் அப்படியா?"

"ஒரு அமைச்சரின் கை சுளுக்கிக் கொண்டதாம்".

"எதனால்"?

"பணம் வாங்கி, வாங்கிச் சுளுக்கிக் கொண்டதாம். டாக்டர் அட்வைசு செய்தார் குறைத்துக் கொள்ளும்படி; அதிலே இருந்து குறைத்துக் கொண்டாராம்.

மற்றும் நம்ம அமைச்சர்களைப் பற்றி அவதூறு பேசக் கூடாது; சட்டப்படி குற்றம். அவதூறு வழக்குப் போடக் கட்சியிலே நிறையப் பணம் ஒதுக்கிவச்சு இருக்காங்க',

மானநஷ்ட வழக்குகள் ஊழலைக் காப்பாற்றும் தாண்கள் ஆகிவிட்டன; இன்றைய இலஞ்ச ஊழலுக்குச் சட்டப் பாதுகாப்புத் துணை செய்கிறது. யாரும் ஒன்றும் அசைக்க முடியாது' என்று விளக்கினேன்.

"நல்ல ஆட்சி வேண்டுமானால் துணிந்து சொல்ல வேண்டியது தானே"!

"நல்ல ஆட்சி யாரும் எதிர்பார்க்கலே, அப்படி எதிர் பார்க்கிறவங்க ஒன்றாகச் சேர்வது இல்லை. அவர்கள் சில பேருதான், அதுவும் லிமிடெட் கம்பெனி தான்; இதைப் பற்றி எல்லாம் பேசறோம் அவ்வளவு தான்' என்றேன்.