பக்கம்:குப்பைமேடு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

195

படுத்தி விடுவான் என்று அவனைத் தீர்த்துக்கட்டி விட் டார்கள். பாவம் ! அப்பாவி, உலகம் தெரியாவன். அவன் எனக்குத் தெரியும். என் வீட்டுப்பக்கத்தில் அறை எடுத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்தான் . அவனுக்குக் கோவில் நிருவாகத்தில் இடம் கிடைத்ததே என்று சந்தோஷப் பட்டேன். அவன் திருவாசகம் படிக்காமல் இருக்க மாட்டான். அவன் திருவாசகம் படித்தது தவறு என்று பட்டது. உலகத்தைப் படித்து இருக்க வேண்டும். நாம் வாழும் உலகம் போலிகள் மிக்கது. கொள்ளை யர்கள் மிகுதி. முகமூடிக் கொள்ளையர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருகிறோம் என்பதை அவனால் உணர முடியாமல் போயிற்று.

என்னை வேலைக்கு எடுத்துக் கொண்ட அறநிலையத் தார் வாக்கெடுப்பில் வந்தவர் சிலர். அரசாங்கம் அனுப்பி வைத்தவர் சிலர். பாரம்பரிய வாரிசுகள் சிலர் அவர்களுள் ஒருவர் வழக்கறிஞர். இப்பொழுது வழக்கு உரைஞர் என்று தெளிவாகப் போட்டுக் கொள்கிறார்கள். அறிஞர் என்பது மிகைப்பட்ட சொல்லாகும். இவர்கள் சாதி அடிப்படையில் நீதி நிலை நாட்டினர். அவரவர் சாதிக்காரர்களுக்கு நன்மை செய்வது என்று ஊறி இருந்த காலம் அது. எனக்கு யாரும் சிபாரிசு செய்யத் தக்கவர் கிடைக்கவில்லை. இவர் அப்பா தான் எனக்காக அறங் காவலர் சிலரிடம் சொல்லி இவன் நல்ல பையன்; நமக்கு வேண்டியவன். உதவி செய்யனும்' என்று கேட்டுக் கொண்டார்.

அந்தக் காலத்திலே உத்யோகம் தருவதற்கு யாரும் இலஞ்சம் வாங்கியது இல்லை. இது பொற்கலாம் இப் பொழுது எந்தத் துறையில் இது புகவில்லை என்று துரு வித் தேட வேண்டியதாகி விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/197&oldid=1116110" இலிருந்து மீள்விக்கப்பட்டது