பக்கம்:குப்பைமேடு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

ராசீ

அவள் பொறுமை கடைப்பிடித்திருப்பாள். அப்பா வீட் டிற்குச் சென்றால் சோற்றுக்குக் குறைவில்லை. துணிந்து வாழமுடியும் என்ற நம்பிக்கை அவள் நடையில் தெரிந்தது. அவளுக்கு ஒரு காலத்தில் கணவனோடு வந்தபொழுது ஆரத்தி எடுத்து வரவேற்ற வீடு அது. இன்று வெறுங்கை யோடு வந்து நின்றனர்.

'அம்மா ஆரத்தி கொண்டு வா! என்றாள். அன்று என் கணவனோடு வந்தேன். ஆரத்தி எடுத்து வரவேற் றாய். இன்று என் மகளோடு வருகிறேன். அதே வரவேற் புக் கொடு' என்று சொல்லிக் கொண்டே நுழைந்தாள்.

அவலத்தையும் சுவைத்துக் கூறும் மனஉணர்வு அந்தச் சொல்லில் காணப்பட்டது. இளையவள் ஓடோடி

வந்தாள்.

'என்ன அக்கா? மாமா வரவில்லையா?' என்று வினாவை எழுப்பினாள் அதற்கு மேல் அவள் ஆர்வம் குழந்தையின் மீது சென்றிவிட்டது. 'ஒரு கடிதம் போடக்கூடாதா? என்ற கேள்வி அந்த வீட்டு மூத்த குடி மகளிடம் இருந்து வந்தது. அதாவது 'பாட்டி' என்று அவளைக் குறிப்பிட்டனர்.

எனக்கு இந்தச் சூழ்நிலை உதவுவதாகப்பட்டது. மூத்தவள் வாழாவெட்டி. இளையவள் படுசுட்டி. இரண்டு பிரச்சினைகள் அந்த வீட் டில் செயலுக்குத் துரண்டும் கதைக் கருக்களாக உள்ளன. இனி சாதிப்ப தற்கு வழி உண்டு. மூத்தவளை வாழ வைக்க அவர் எப்படியும் பணம் தேட வேண்டும். இளையவளுக்கு நல்ல இடம் தேட நாலு இலட்சமாவது தேவைப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/202&oldid=1116117" இலிருந்து மீள்விக்கப்பட்டது