பக்கம்:குப்பைமேடு.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

211

'மறுபடியும் எப்பொழுது வருவது?' என்று விடை பெற்றுக் கொண்டு நடை கட்டுவார்கள் அவர்களும் சலிக்க மாட்டார்கள். இவரும் சலிக்க மாட்டார் என்று சிரித்துக் கொண்டே பேசினாள்.

-8

அடுத்த அத்தியாயம் தொடங்குகிறது.

காயத்ரி கதாநாயகி ஆகிறாள். அவளைப் பற்றிய பேச்சு தொடங்குகிறது; அதே பேச்சு என் வீட்டிலும் இடங்கொள்ளத் தொடங்குகிறது. காரணம் எனக்கு வயசு வந்த மகன் அவன் சினிமாப்படம் பகல் காட்சிக்குப் போகிறன் என்பது அவ்வப் பொழுது தெரிந்தது. அதற் கான அறிகுறிகள் தென்பட்டன.

சில சமயம் படங்கள் பார்க்காமலேயே படம் பார்க்கச் செல்கிறேன் என்று கூறுவான். முதலாவது 'நீ எங்கே போகிறாய்?' என்று கேட்பதே அநாகரிகம். அதற்கு அவன் பதில் சொல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. என்றா லும் நாகரிகம் இந்தப் படத்தைப் பயன்படுத்துகிறது. அவ னுக்கும் மணப் பேச்சு எடுக்கும் கட்டம் வந்த பொழுது அவன் காயத்ரி ஜெபம் செய்வதை என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது.

'அவள் எப்படி உனக்குத் தெரியும்? கல்லூரிப் போர் அணியில் அவள் பயிற்சி பெறும் வீராங்கனை" என்றான்.

'அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்' என்று தகப் பனாருக்குரிய பாஷையில் எதிர்ப்பைத் தெரிவித்தேன் அவன் அதைக் காகில் போட்டுக் கொள்வதாக இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/213&oldid=1116139" இலிருந்து மீள்விக்கப்பட்டது