பக்கம்:குப்பைமேடு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

231

மைத்துனர் உதவியால் முதல் பெண்ணைத் தக்க

இடத்தில் தர முடிந்தது. இந்தப் பெண்ணுக்கு இவர் தான் எல்லாம் செய்ய வேண்டும்.

காயததிரி தேசியப் படையில் சேர்ந்து முதல் பரிசு வாங்கி இருந்தாள். நாட்டில் சிறந்த சேவகி' என்ற நற் சான்று பெற்று இருந்தாள். எதிலும் ஒரு சுதந்திரமான போக்கு அவளிடத்தில் காணப்பட்டது. அவள் தத்தை யின் ஆடம்பரம் அவளுக்குத் தாங்க வில்லை.

இந்த நாட்டில் குடிப்பதற்கு நல்ல தண்ணிர் கிடை. யாது; ஆனால் சாராயம் அதன் இடத்தைப் பிடித்துக் கொண்டது. தம் கவலைகளை மறக்க ஆண்டவனிடம் முறையிட்டு அலுத்து விட்டு மதுக் கடைகளில் தம் மதி யினை அடகு வைக்கிறவர்களைப் பார்த்திருக்கிறாள். பெண் பிறந்து விட்டது என்ற பேர் அதிர்ச்சியால் குப்பைத் தொட்டியில் போட்டு விடுதலை பெறும் வீராங்கனை களைக் கண்டிருக்கிறாள். அரைகுறை படித்து விட்டுச் செய்வது தெரியாமல் அஞ்சல் வழிக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதைக் காலம் கடத்தும் கருவியாகக் கொள் ளும் சம வயதினரைப் பார்த்திருக்கிறாள்.

இந்த நாட்டில் பெண்கள் ஒரு சாபக் கேடு என்ற அள விற்குச் சுமையாக வாழ்வதைக் கண்டிருக்கிறாள். தன் தந்தைக்குத் தந்தை மூன்று பெண்களைப் பெற்று விட்டுத் தான் கடைசிவரை அவர்களுக்கு மாப்பிள்ளை தேடும் மாமாங்கத்தைக் கண்டிருக்கிறாள். பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் ஏன் இவ்வளவு கவலைகள் தர வேண்டும்? வாழ்க்கை சுமை ஆகக்கூடிய நிலையில் பொறுப்புகளைத் தாங்கும் பொதிச் சுமைகளாகப் பலர் நைந்து நொந்து உயிாற்ற இயக்கமாகி விட்டதைப் பார்த்திருக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/233&oldid=1116160" இலிருந்து மீள்விக்கப்பட்டது