பக்கம்:குப்பைமேடு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

ராசீ

கொடுப்பாத உணர முடிந்தது. இது ஒரு சோதனை; தான் வெற்றி பெறுவது புதிய சாதனைதான்; இந்த வேதனை யைத்தன் காதலனிடம் சொல்லிப் பங்கிட்டுச் கொள்ள நினைத்தாள். நிச்சயம் தன் தந்தையின் சொத்தை அவன் துச்சமாகக் கருதுவான் என்பதில் அவளுக்கு நம்பிக்கை இருந்தது.

அவள் வாழ்க்கையில் ஒரு திருப்புநிலை ஏற்பட்டது. தான் இந்தப் பாரத நாட்டு அரும்புதல்வி என்பதை உணர்ந்தாள், பாரத அன்னை தன்னைப் பூமியில் அவ தரிக்கச் செய்து இருக்கிறாள்; பூரண நிலவின் ஒளியில் அமுத கிரணங்களைத் தான் அவள் கண்டிருக்கிறாள். அது மறைந்து வான் இருள் சூழும் என்பதை எண்ணிப்பார்க்க வில்லை. தானும் அவனும் இந்த உலகில் வாழ்வதைப் போன்ற பிரமை அவளை ஆட்டிக் கொண்டிருந்தது. காதல் உறுதியானது; நெக்கு விடாது என்பது அவள் நம்பிக்கை.

புதிய பணம் பழைய பாதையில் இருந்து அவர்களை விலக்க முற்பட்டது. காதல் இருவர் உள்ளம் கலந்து விட்டால் இந்த வையகம் என்ன, வானமே தமக்கு மண்டி யிட்டு வாழ்த்துக் கூறும் என்று எதிர்பார்த்தாள். இத்தனை மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள்? பணம் இல்லாமல் மரப்பாவைகளாக வாழும் வாழ்க்கை அவளை வெறிச்கச் செய்தது. மணம் இருவர் கலப்பை அறிமுகம் செய்யும்? ஒரு சடக்கு இதை அவனிடம் தெரியப்படுத்துவது மிகை எனப்பட்டது.

நாட்கள் நெருங்கின. மணநாள் மிகச் சமீபம் வந்து விட்டது. எதற்கும் அவனை ஒரு வார்த்தை கேட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/240&oldid=1116168" இலிருந்து மீள்விக்கப்பட்டது