பக்கம்:குப்பைமேடு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

ராசீ

'என் அப்பாவைக் கேட்டுத்தான் சொல்ல முடியும். என்று வேட்டு வெடித்தான்.

'இந்தப் பாட்டையும் உங்கள் அப்பாவிடம் பாடி விடுங்கள் அவர் தரும் ஒப்புதல் அதைக் கேட்டு அது நமக் குச் சாதிகமாக இல்லை என்றால் அதைத் தூக்கி எறி யுங்கள்' என்று துணிந்து கூறினாள்.

இரண்டு செங்குத்தான பாறைகளுக்கு இடையே ஒரு இடைவெளி இருப்பது உணர முடிந்து. இருவரும் தனித் தனியே நிற்பது போல் தோன்றியது.

'கவலைப்படாதே கரம் நீட்டு; பிடித்துக்? கொள்' என்றாள்.

உத்தரம் வந்தது துவாரகை மன்னனுக்கு. 'கலியாணச் செலவுக் காசுக்கு ஒரு லட்சம் கேள்' என்று தூது சென்ற கண்ணனிடம் பாண்டவர்கள் செய்தி உரைத்தனர்.

'ஐந்து ஊர் கேள்; அது மறுத்தால் ஐந்து வீடு கேள்' என்று பாண்டவர் கண்ணனிடம் சொல்லி அனுப்பினார் களாம்.

'அதே நிலையில் தான் என்னைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டார் என் தந்தை' என்றான்.

"அவர் சொத்துத் தராவிட்டால் போகிறது; வரதட் சணை என்ற பேச்சும் நமக்குத் தேவை இல்லை; அவர்களுக் குப் போட்டியாக நாம் செலவு சொய்ய முடியாது. லட்சம் என்பது பெரிசு அல்ல; கோடிகள் ஊழல்களில் உழலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/242&oldid=1116170" இலிருந்து மீள்விக்கப்பட்டது