பக்கம்:குப்பைமேடு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

241

போது இந்த லட்சங்கள் அவர்களுக்கு யானை சிந்தும் சோளப் பொறி, இதை மட்டும் கேள்' என்று சொல்லி அனுப்பினார்.

என் சொல்லை ஆமோதித்தான். எதுவும் தர இயலாது என்பது வீண்தடிவாதம் நம்மைக் கடனில் ஆழ்த்திவிட்டு அடிமைப்படுத்திச் செய்யும் சூழ்ச்சி; உன்னை ஆட்டிப் படைக்க அவர் கையாளும் தந்திரம்' என்று சொல்லி அனுப்பினேன்.

தள்ளிப் போடுங்கள் என்று சொல்லி அனுப்பி னேன்.

அவனால் எதையும் முடிவு செய்ய இயலவில்லை. அவனே ஒரு முடிவுக்கு வந்தான்.

'லட்சம் கேள்; அது போதும்; இல்லாவிட்டால் நாம் கவுரவமாகப் பிரிந்து விடலாம்' என்று சொல்லி விட் டான். பாதைகளுக்கு இடையே அவன் ஒரு மரப்பலகை கேட்டான்; பாலமாக அமைய அந்த லட்சம் அவனுக்குத் தேவைப்பட்டது.

மதுரை மில் இவர்களைக் கைவிட்டு விட்டது அந்தப் பையனுக்கு இவள் அழகில் ஒரு திருத்தம் தேவைப்பட்டது பூரீ தேவியின் பழைய மூக்கைப் போல் குட மிளகாய் ஆக அவள் மூக்கு இருந்தது. அமெரிக்கா அனுப்பிப் பிளாஸ்டிக் அறுவை செய்து கொண்டால் தான் மணப்பதாக அந்தப் பையன் போட்டோவை வைத்து முடிவு செய்தான்.

காயத்திரிக்கும் அவன் சொல்வது நியாயமாகப்பட் டது. மாடு பிடித்து வாங்குகிறவர்கள் மடியைத் தொட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/243&oldid=1116171" இலிருந்து மீள்விக்கப்பட்டது