பக்கம்:குப்பைமேடு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

ராசீ

எனக்கு இதுவரை ஏற்பட்டது இல்லை அவள் நுட்ப அறிவை நான் மதிக்க வேண்டி இருந்தது. அவள் ஒட்பம் மிக்கவள் என்பதை அறிய முடிந்தது.

கருத்துகள் இல்லாத எழுத்து அர்த்தமற்றவை என்பாள், வெறும் உணர்வுச் சித்திரங்கள் படிக்கும்போது நெஞ்சைத் தொடும்; பிறகு அவர்களைக் கைவிடும். சிறந்த லட்சியங்களை உருவாக்க வேண்டும் என்பாள். மனிதனின் உரிமைகளுக்கு வழிகோல வேண்டும்; அவற்றைச் சுட்டிக் காட்டினால் போதும் சமுதாயம் விழிப்புப் பெறும் என்று கூறினாள். இது இலக்கியத்தின் பணி என்று அடிக்கடி கூறுவாள். இது என் படைப்புக்கு மணியோசையாக

இருந்தது.

எழுத்து வர்க்கப் போராட்டத்தைத் தூண்டினால் அதுமுற்போக்கு எழுத்து ஆகும். இனப்போராட்டம், சாதிப் போராட்டங்கள் இவற்றைத் தூண்டுவது பிற் போக்கு எனத் தெளிவு படுத்தினாள். எதுவும் உணர்த் தாதது புறம்போக்கு இலக்கியம் என்றாள். இலக்கியத் திற்கு அப்பாற்பட்டது என்பது அவள் கருத்து.

அவள் என்னை விட்டுப் பிரிந்து சென்றது 'ஒரு சின்ன விஷயம்தான்; வழக்கம்போல் என் பெண் பாத்திரத்தை மிகைப்படுத்தி வருணித்து விட்டேன். இது தேவையற்றது என்பது அவள் வாதம். அழகைச் சுட்டிக் காட்டலாம். ஆனால் அது அளவுக்கு மீறினால் ஆபாசமாகி விடுகிறது என்கிறாள்.இது பெரிதாக மாறி அவள் வெளி நடப்புக்குக் காரணம் ஆயிற்று, எனக்கும் இடைவெளி தேவைப் பட்டது. பிரிவு சூட்டைத் தணிவிக்கிறது. எங்கள் வாதங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/48&oldid=1113138" இலிருந்து மீள்விக்கப்பட்டது