பக்கம்:குப்பைமேடு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அவள் என்னதான் சொல்கிறாள்?" 'படித்த பெண், ஒவ்வொருத்தரும் ஏதாவது தொழில் செய்ய வேண்டும். தானும் பொருள் ஈட்டித் தன் பெருமையை நிலை நாட்ட வேண்டும் என்கிறாள். பட்டங் களைப் படித்துவிட்டுக் கட்டிலின் கட்டுக்குள் அடங்கி இருப்பது கூடாது என்கிறாள். அவளும் ஒர் உழைப்பாளி என்பதை நிறுவ வேண்டும்; ஆணுக்கு நிகராக அலுவல் களைச் செய்து அறிவு வளர்க்க வேண்டும்" என்கிறாள். 'இன்று எத்தனை எம்.எல்.ஏக்கள் பெண்கள்? எம்.பிக் கள் எத்தனை பேர் பெண்கள்? ஒரு சிலர் அமைச்சர் ஆகி விடலாம்; அதனால் பெண்மை உயர்கிறது வரவேற் கத்தக்க வளர்ச்சிகள் முன்னேற்றங்கள்; அவற்றோடு பொதுச் சேவை செய்யும் மன்றங்களில் தமக்கு உரிய இடங்களைச் சரி சமமாகப் பெண் இடம் பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறாள். ஒரு குழந்தை பெற்றதும் அவள் வீட்டில் இருக்க லாம். அக்குழந்தையைக் கவனிக்க அவள் தேவைப்பட லாம். அதுவரை தொழில் செய்வதில் அவள் உறுதியாக இருக்கிறாள்' என்றேன். 'கலியாணமானதும் வெளியே அனுப்புவது உசித மாகப் படவில்லை. அப்படிப்போனாலும் கவுரமான தொழிலாக இருக்க வேண்டும்.' வயிற்றுப் பிழைப்புக்கு வழி இல்லாதவர்கள் செய்யும் இந்தத் தொழிலை இவள் செய்வது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அந்த இடத்திற்கு ஆயிரம்பேர் காத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/65&oldid=806341" இலிருந்து மீள்விக்கப்பட்டது