பக்கம்:குப்பைமேடு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

ராசீ

'இந்தச் சின்னக் குழந்தை உங்கள் தோள்களுக்குச் சுமையாக இருக்காது என்று நினைக்கிறேன். பிறக்கும் போது எடை குறைவுதான், இனிமேல் தான் அது எழிலும், எடையும் கூட வேண்டும். அடுத்தது ஆணா? பெண்ணா என்ற ஆர்வம் எழுவது இயற்கைதான்.

உங்களுக்குப் பையன் பிடிக்குமா? பெண் பிடிக்குமா என்பது பிரச்சனை அல்ல; நமக்கு எது பிடிக்கும் என்று ஆராய்ச்சி செய்து கொண்டு பின் வடிவு அமைப்பது இல்லை. எதுவானாலும் சமமாகப் பார்க்கும் பார்வை உங்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இதில் விருப்பு வெறுப்புக்கு இடம் தரத் தேவை இல்லை. கதை யில் சிறிது மர்மம் வைத்து எழுதுவது உங்களுக்குக் கை வந்த கலை ஆகும். அதில் சுவை இருக்கிறது அதே அனுபவத்தை இதில் உங்களுக்கு உண்டாக்க விரும்பு கிறேன். அது அவ்வளவு முக்கியமான விஷயமாகப்பட வில்லை. அதனால் அதை இந்தக் கடிதத்தில் எழுதாமல் விடுகிறேன்.

முன் கூட்டி எழுதினால் அதைப்பற்றி உங்கள் நண்பர் கள் உங்களை வாழ்த்த ஒரு வாய்ப்பு ஏற்படும். எப்படிப் பாடப் பிறந்தாலும் எதுவாக இருந்தாலும் யாரும் இரங் கற்பா போவது இல்லை. ஆணாக இருந்தால் அதிர்ஷ்டக் காரன் என்பார்கள்; பெண்ணாக இருந்தால் அதிருஷ்டம் வரும் என்பார்கள்.

'நீ தந்தையாகி விட்டாய்' என்று வாழ்த்திவிடுவார் கள். அவர்கள் எந்தக் கருத்தில் சொல்வார்கள் என்பது எனக்குக் கவலை இல்லை. என்னைப் பொறுத்தவரை நீங் கள் தான் அதன் தந்தை என்ற பெருமையோடு சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/76&oldid=1114139" இலிருந்து மீள்விக்கப்பட்டது