பக்கம்:குமண வள்ளல்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

குமண வள்ளல்

இந்த நிலையில் புலவருடைய நலந் தீங்குகளைத் தெரித்துகொள்ள விரும்பினான் குமணன்.

கடுவனது பேச்சு வந்தபோதே புலவருக்குத் தம் மனைவியின் நினைவு உண்டாயிற்று. குமணன் தம் குடும்பத்தைப்பற்றிக் கேட்டுவிடவே, அந்த நினைவு வலிமையுற்றது. இங்கே வந்து தங்கிய சில நாட்களில் தமிழ்ச் சுவையைக் குமணணோடு நுகர்ந்தார். பல பாடல்களைச் சொன்னர். ஆனால் தம்முடைய வறுமையைப்பற்றிச் சொல்லவில்லை. தமக்கு உதவி புரிய வேண்டும் என்றும் கேட்கவில்லை. ‘அதை எப்படிச் சொல்வது?’ என்று தயங்கினார். எத்தனை காலம் அங்கே தங்கியிருந்தாலும் குமணன் சிறந்த வகையில் உபசாரம் செய்து பேணுவான். ஒவ்வொரு நாளும் இனிமையாகவே கழியும். ஆனால் ஊரில் அவருடைய தாயும் மனைவியும் மக்களும் உண்ண உணவின்றி வாடுவார்களே! அவர்கள் பசித்திருக்கப் புலவர் மட்டும் இங்கே விருந்து உண்டு கவலையின்றி இருப்பதா? அப்படி இருப்பது அறமாகுமா?

இந்த எண்ணம் பெருஞ்சித்திரனாருடைய உள்ளத்தினூடே நின்று குத்திக்கொண்டே இருந்தது. தக்க சமயத்தில் தம் வறிய நிலையைத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். நல்ல வேளையாக அரசனே குடும்பத்தைப்பற்றிக் கேட்டுவிட்டான். இதைக் காட்டிலும் வாய்ப்பான செவ்வி வேறு ஏது?

குமணன் கேட்ட கேள்விக்கு விடை கூறப் புகுந்தார் புலவர்.

“எனக்கு மனைவி மக்கள் எல்லோரும் இருக்கிறார்கள். முதுமையால் தளர்வுற்ற தாய் ஒருத்தியும் இருக்கிறாள். இங்கே நான் மன்னர்பெருமான் செய்