பக்கம்:குமண வள்ளல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘எல்லோர்க்கும் கொடு’

47

உங்களுக்கு எப்போது எது வேண்டுமானாலும் சிறிதும் தயக்கமின்றி எனக்குத் தெரிவித்தால் உடனே அனுப்புகிறேன். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் வாழ்க்கை நிலை குறையக் கூடாது. அதை எண்ணியே இவற்றை அனுப்புகிறேன். நீங்கள் சென்று வாருங்கள் என்று குமண வள்ளல் பெருஞ்சித்திரனாருக்கு விடை கொடுத்து அனுப்பினான்.

அவன் அளித்த பரிசில்களைக் கண்டு புலவர்க்கு மூர்ச்சை போடாததுதான் குறை. ‘இனிப் பல மாதங்கள் நம் குடும்பத்துக்கு ஒரு விதமான குறையும் இல்லை’ என்ற பெருங்களிப்புடன் அவர் ஊரை அடைந்தார். அவர் நடையிலே என்றும் இல்லாத பெருமிதம் உண்டாயிற்று.

வீட்டுக்கு வந்து, தாம் பெற்ற பரிசில்களைத் தம் அன்னையாருக்குக் காட்டினார். பின்பு தம் மனைவியை அணுகி, “அதோ பார், அந்த வண்டிகளில் உள்ள பண்டங்களை இறக்கி வைத்துக்கொள்” என்றார்.

அவற்றை ஏறெடுத்துப் பார்த்தாள் அந்தப் பெண்மணி. “எல்லாம் குமண வள்ளல் தந்தவையா?” என்று வியப்புடன் கேட்டாள்.

“எல்லாம் அந்தப் பெருமான் வழங்கியனவே. இவை எல்லாவற்றையும் ஒழுங்காக எடுத்து வை. வைத்துவிட்டு வா. உன்னிடம் சில செய்திகளைச் சொல்லவேண்டும்.”

அவள் சுறுசுறுப்பாக, வீடு தேடி வந்த திருமகளைப்போல எண்ணி அவற்றையெல்லாம் எடுத்து வைத்தாள். வீடு கொள்ளாத பண்டங்கள்! தெரிந்தவர் வீடுகளில் சில பண்டங்களை இறக்கும்படி ஏற்பாடு செய்தாள். ஒருவாறு எல்லாவற்றையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/53&oldid=1357140" இலிருந்து மீள்விக்கப்பட்டது