பக்கம்:குமண வள்ளல்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

குமண வள்ளல்

அருமை தெரியாத விலங்காக அல்லவா இருக்கிறான்? பிச்சைக்காரனுக்குச் சொல்வதுபோல, பெருங்குடிப் பிறந்த மக்கள் சொல்ல அஞ்சும் வார்த்தைகளைச் சொல்கிறான். இவனுக்குப் புலவருடைய பெருமையையும் கொடுப்போருடைய பெருந்தன்மையையும் அறிவுறுத்த வேண்டும். இவன் அவற்றைத் தெரிந்து நாணிக் குலையவேண்டும்’ என்று அவர் யோசனை படர்ந்தது. ‘என்ன செய்தால் இவனுக்குப் புத்தி உண்டாகும்?’ என்று சிந்தித்தார். அவருடைய அகக் கண்முன் குமணன் நின்றான். ‘ஆம்! அந்தப் பெருமானைக் கொண்டே இதைச் சாதிக்கவேண்டும்’ என்று திட்டமிட்டார்.