பக்கம்:குமண வள்ளல்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

குமண வள்ளல்

ஏற்ற அமைச்சர்கள் இருக்கமாட்டார்களா? அவர்களோடும் சேர்ந்து சூழ்ச்சி செய்தான்.

“உங்கள் தமையனர் இப்போதும் தம்முடைய கொடையை நிறுத்தவில்லை. இப்படியே இருந்தால் ஏதேனும் ஒரு நாள் நாட்டையே விற்றுவிட வேண்டியதுதான்” என்றான் ஓர் அமைச்சன்.

“நான் அதை முன்பே எதிர்பார்த்தேன். என் கருத்தை வெளிப்படையாகவும் அவனிடம் சொன்னேன்” என்றான் இளங்குமணன்.

“வேற்று நாட்டு மன்னன் அவருக்குப் படைப் பலம் ஒன்றும் இல்லாமல் இருப்பதை அறிந்தால் அவரை எதிர்த்துப் போர் செய்ய முயன்றாலும் முயலலாம்” என்று வேறு ஓர் அமைச்சன் சொன்னான்.

“அதையும் நான் முன்பே அவனுக்குச் சொல்லியிருக்கிறேன்” என்று இளங்குமணன் கூறினான்; “அப்படி வேறு ஒருவன் படை எடுத்து வந்து கைக்கொள்ளும் அந்த நாட்டை நாமே கைப்பற்றினால் என்ன என்றுதான் எண்ணமிடுகிறேன். எப்படியும் அவன் தன் நாட்டைத் தொலைத்துவிடப் போகிறான். அது வேறு யாருக்காவது போவதைவிட உரிமையுள்ள எனக்கு வருவது முறை அல்லவா? வேறு அரசன் படையெடுத்து வந்து போரிட்டு நாட்டைத் தன்னுடையதாக்கிக் கொண்டால் அவன் எதிர்க்கப் போவதில்லை. அதற்குரிய வலிமை அவனிடம் இல்லை. அயலான் நாளைக்குச் செய்கிற காரியத்தை நாம் இன்றே செய்தால் என்ன என்று யோசிக்கிறேன்” என்று அவன் மீண்டும் கூறினான்.

“அப்படிச் செய்வது நல்லதுதான். ஆனால் அதற்கு ஏற்ற வகையில் நாம் நம்முடைய படைப்-