பக்கம்:குமரப் பருவம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குரல்மாறுபாடும் தோற்றமும்
21
        மாதவிடாய்க்கு மூன்று நாட்களுக்கு முன்பே பெண்களின் உடம்பில் இரத்த அழுத்தம் அதிகப்படுகிறது. மாதவிடாய் தொடங்கிய முதல் இரண்டு நாட்கள்வரை இந்த நிலைமை இருக்கும். அதுவே தலைவலிக்கும், பொறுமையிழந்து திடீரென்று கோபித்துக் கொள்ளுதல் போன்ற செயல்களுக்கும் காரணமாகிறது. மாதவிடாய் தொடங்கி இரண்டு நாட்களுக்குப் பிறகு இரத்த அழுத்தம் குறையத் தொடங்கிச் சாதாரணமாக இருப்பதற்கும் கீழே வந்துவிடுகிறது. அதுவே களைப்பிற்கும், சோர்விற்கும் காரணமாகிறது. மாதவிடாய் முடிந்த சுமார் ஒரு வாரத்திற்குள் இரத்த அழுத்தம் அதன் இயல்பான நிலையை அடைந்துவிடுகிறது. இந்த மாதிரியான இரத்த அழுத்த மாறுபாடுகள் மனநிலைமையிலும் மாறுபாடுகளை உண்டாக்கக் காரணமாகின்றன.
குரல் மாறுபாடும் தோற்றமும்
         மலர்ச்சி யெய்துகின்ற பருவத்திலே வளர்ச்சி வேகமாக நடைபெறுகின்றதென்று சொன்னேன். மற்ற உறுப்புக்களைப்போல் குரல் வளையும் வளர்கின்றது. குரல்வளையோடு சேர்ந்து அதிலுள்ள பேசுவதற்கு உதவும் குரல் தந்திகளும் நீண்டு வளர்கின்றன. அவை முன்னிருந்ததைவிட அநேகமாக இருபங்கு நீளமாவதால் குரலின் ஸ்தாயி குறைகின்றது. சிறுவயதிலே ஐந்து கட்டைச் சுதி வைத்துக்கொண்டு பாடுகிற பையன் இப்பருவத்திலே அவ்வாறு பாடமுடிவதில்லை. சுதி குறைகிறது. ஆனால், குரலில் அழுத்தமும் நயமும் ஏற்படுகின்றன. பெண்களின் குரலிலே இவ்வளவு மாறுதல் ஏற்படுவதில்லை. சுதி குறைவதானாலும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/22&oldid=1230350" இலிருந்து மீள்விக்கப்பட்டது