பக்கம்:குமரப் பருவம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சம் முதலிய கிளர்ச்சிகள் 37 குழந்தையின் கோபத்திற்குக் காரணம ஒரு மாதிரி யாக இருக்கும்.விளையாட்டுப் பொம்மையைப்பிடுங்கில்ை குழந்தைக்குப் பெரிய கோபம் வரும். சட்டை போட்டுக் கொள்ளும்படி வற்புறுத்தினல் கோபம் வரும். ஆனால், குமரனுடைய கோபத்திற்குக் காரணம் வேறுமாதிரியாக இருக்கும். அவனிடம் யாராவது நியாயமற்ற முறையில் நடந்துகொண்டால் அவனுக்குத் தாங்க முடியாது. அவனிடம் கொஞ்சம் தோரணையாக நடந்தாலும் அவனுக்குப் பிடிக்காது. குழந்தை தன் தாயின் அன்பெல்லாம் தன்மேலேயே இருக்கவேண்டுமென்று ஆசைப்படுகிறது. வேறு குழந் தையைத் தாய் எடுத்தால்கூடப் பல குழந்தைகள் பொறுத்துக்கொள்ளமாட்டா. வேருெரு குழந்தை தாயின் அன்பைப் பகிர்ந்துகொள்ள வந்துவிட்டதே என்று அவற்றிற்குப் பொருமை உண்டாகிறது. ஆனல், குழந்தை வளர வளர அதன் விருப்பங்கள் மாறிக் கொண்டு போகின்றன. பத்து வயதிலே குழந்தைக்கு அதன் தோழர்களின் கூட்டத்தினிடத்திலே பற்று.அதிகம். அப்பொழுது இந்தப் பொருமை பெரும்பாலும் மறைந்து போகும். குமரப் பருவத்திலே இந்தப் பொருமை மறு படியும் தலையெடுக்கத் தொடங்கும். ஆனல், அந்தப் பொருமைக்குக் காரணம் தாயல்ல. குமரனும் குமரியும் அவர்கள் ஆழ்ந்து நேசிப்ப்வர்களின் அன்பு முழுவதும் தங்கள் மேலேயே இருக்க வேண்டும் என்று விரும்பு கிருர்கள். தான் நேசிக்கும் ஒருத்தி அல்லது ஒருவன் வேருெருவரோடு சிரித்துப் பேசுவதைக்கூடப்பொறுத்துக் கொள்ள முடியாதபடி பொருமை உண்டாவதுண்டு . இப்படிப் பொருமையால் வாடும்போது பெண்கள் அழுவதும் உண்டு. குமரப் பருவத்தில் தோன்றும் அன்பும் காதலும் அதிக ஆழமானவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/38&oldid=806579" இலிருந்து மீள்விக்கப்பட்டது