பக்கம்:குமரப் பருவம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பாடும் தண்டனையும் 47 இருப்பதில்லை. அறிவு முதிர்ச்சி பெறப் பெற அவற்றைப் பற்றியெல்லாம் சிந்தனை செய்து நல்லவை எவை தீயவை எவை என்றெல்லாம் ஆராயத் தோன்றுகிறது. பெரிய வர்கள் கூறியவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள விருப்பம் உண்டாவதில்லை. ஒழுக்கத்தை இப் பருவத்தில் அமைப்பதில் தோழர் களின் மனப்பான்மை பங்கு கொள்வதோடு, படிக்கும் நூல்கள், பார்க்கும் சினிமாக்கள், கேட்கும் சொற் பொழிவுகள் எல்லாம் முக்கியமான இடம் பெறு கின்றன. ஆத்லால் இவற்றையெல்லாம் விரும்பத்தக்க தாக அமையும்படி நயமான முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும. கட்டுப்பாடும் தண்டனையும் குமரப் பருவம் அடைந்த ஆண்களையும், பெண் களையும் குழந்தைகளாகவே நினைத்து நடத்துபவ்ர்கள் பலர். குழந்தைகளுக்கு ஏற்படுத்திய நடத்தை விதிகளும் கட்டுப்பாடுகளும் அப்படியே குமரப் பருவத்தினருக்கும் பொருந்தும் என்றும் அவர்கள் எண்ணுகிருர்ள். இதல்ை தொல்லைகள் பல நேர்கின்றன. பெற்ருேரின் சொல்லைமீறி நடக்கும் நிலைமையும் சில சமயங்களில் உண்டாகின்றது. கட்டுப்பாடு வேண்டும் என்பது மெய்தான்; ஆளுல் அது குமரப் பருவத்திற்கு ஏற்றதாகவும், அதன் தேவையை அப் பருவத்தினர் உணரக் கூடியதாகவும் அமையவேண்டும். குமரப் பருவத்திலே சிந்தனை செய்யக் கூடிய ஆற்றல் வளர்கின்றதல்லவா? அதனல் அப்பருவத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/48&oldid=806598" இலிருந்து மீள்விக்கப்பட்டது