பக்கம்:குமரப் பருவம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 குமரப் பருவம் நல்ல பொழுது போக்கிற்கு ஏற்ற வசதிகள், குடும்ப நிலை, சுற்றுப்புறம் இவைகளெல்லாம் சரியாக அமையா திருந்தால் குற்றம் செய்யும் மனப்பான்மையை இவை தூண்டுகின்றன. தோழர்களின் நடத்தையும் முக்கிய காரணமாக அமைகின்றது. உ ள் ள க் கிளர்ச்சிகளின் கொந்தளிப்பெல்லாம் திருப்திகரமாக அடங்கி அமையாமற் போவதும் குற்றம் புரியக் காரணமாகிறது. - துணிகரமான செயலிலே ஆசையும், பலரும் பாராட்ட வேண்டுமென்ற ஆசையும் நல்ல வழயிலே நிறைவேருது போனல் சமூக நலனுக்குப் புறம்பான வழி களிலும் அந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளச் சிலருக்கு மனம் செல்கிறது: ஒருசில கற்பனைக் கதை களும், சினிமாக்களும், பத்திரிகைகளும் இந்த நாட் டத்தை மேலும் தூண்டிவிடக் காரணமாகின்றன. அடித்தும், துன்புறுத்தியும் இக்குற்றங்களைச் செய் யாமல் தடுத்துவிடலாம் என்று முன்பு நம்பியிருந்தார்கள். அந்த எண்ணம் இப்பொழுது மாறிவருகிறது. இளங் குற்றவாளிகளுக்குச் சீர்திருத்த நிலையங்களை அரசாங்கமே இப்பொழுது ஏற்படுத்துகிறது. இவ்வகையான குற்றங்களுக்குத் துாண்டுகோலாக இருப்பவைகளே ஆராய்ந்து அவற்றை விலக்குவதே நல்ல முறை என்று இன்று கண்டிருக்கிரு.ர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/51&oldid=806605" இலிருந்து மீள்விக்கப்பட்டது